சிங்கம் திரும்ப வந்துடுச்சு.. முழு பலத்துடன் களம் இறங்கும் மும்பை இந்தியன்ஸ் – வைரலாகும் வீடியோ

Hardik Pandya : இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியது இந்த தடவை கோப்பையை கைப்பற்ற 10 அணிகளுமே தீவிரமாக வேலை பார்த்து வருகிறது.

அதன்படி வருகின்ற டிசம்பர் மாதத்தில் ஐபிஎல் ஏலம் நடத்த இருக்கிறது அதற்கு முன்பாக வீரர்களை விடுவிக்கும் பணியை தொடங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ் உள்பட 8 வீரர்களை விடுவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆர்ச்சர் உள்பட சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களை விடுவித்துள்ளது.

குண்டக்க மண்டக்க பேசி கெட்ட பெயரை சம்பாதித்த 5 நடிகர்கள்.. முரட்டு வில்லனுக்கே தண்ணி காட்டிய சம்பவம்

கேமரூன் கிரீனை டிரேடிங் முறையில் ஆர்சிபி அணிக்கு வாங்கியது.  இப்படி ஒவ்வொரு அணியுமே வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது. இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் தட்டி தூக்கி உள்ளது இதன் மூலம் ஹர்பிக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்துள்ளார் இதில் அவருடைய ரோல் என்னவாக இருக்கும் என்பதுதான் பலரும் கேள்வி..

ரசிகர்கள் கருதுவது என்னவென்றால்.. ரோகித் சர்மா இந்திய அணியின் மூன்று வடிவிலான பார்மட்டிலும் கேப்டனாக இருப்பதால் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கிறது எனவே வருகின்ற ஐபிஎல் -லில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து ரோகித் சர்மா தொடக்க வீரராக வழக்கம் போல அதிரடி காட்ட இருப்பார் என பேச்சுக்கள் பரவுகின்றன.

விஜய், அனன்யா சொன்னதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழும் பூர்ணிமா.! எப்படி தினேஷை மட்டும் பாராட்டலாம்? திருந்தாத சூனியக்காரிகள்

மற்றொரு ரசிகர்கள் ஆல்ரவுண்டர் இடத்தை நிரப்ப ஹர்திக் பாண்டியாவை தட்டி தூக்கி உள்ளது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் எது எப்படியோ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா வந்துள்ளார் அதனை மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்