குண்டக்க மண்டக்க பேசி கெட்ட பெயரை சம்பாதித்த 5 நடிகர்கள்.. முரட்டு வில்லனுக்கே தண்ணி காட்டிய சம்பவம்

திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் பேரையும் புகழையும் அடைந்த பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் அதே சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளை பற்றி தப்பாக பேசுவது சரியான கேள்விக்கு எடக்கு முடக்காக பேசி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார்கள் அப்படிப்பட்ட 5 நடிகர்களை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கிறோம்..

1. மன்சூர் அலிகான் :  எப்பொழுதுமே வித்தியாசமாக பேசுவது தெனாவட்டாக நடப்பது தான் இவருடைய ஸ்டைல். இவர் சமீபத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து பேட்டி ஒன்றில் லியோ படத்தில் த்ரிஷாவை கட்டிலில் தூக்கி போட்டு நடிக்கும் சீன் தனக்கு வரும் என எதிர்பார்த்தேன் ஆனால் அது நடக்கவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

விஜய், அனன்யா சொன்னதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழும் பூர்ணிமா.! எப்படி தினேஷை மட்டும் பாராட்டலாம்? திருந்தாத சூனியக்காரிகள்

2. பிரகாஷ்ராஜ்  : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தொடர்ந்து வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இவர் சந்திராயன் 3 நிலவை நோக்கி சென்ற பொழுது பல்வேறு விதமான எதிர் கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பெயரை கெடுத்துக் கொண்டார்.

3. சத்யராஜ் :  ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர் அதுவும் கோயம்புத்தூர் பாஷையில் பேசி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டணத்தை உருவாக்கினார் இப்படிப்பட்ட சத்தியராஜ் ஒரு மேடையில் நக்மா மற்றும் குஷ்பூ பற்றி பேசி தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

‘ஆட்டோகிராப்’ பட நடிகை கோபிகாவா இது? குடும்பம் குட்டி என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படம்..

4. ராதாரவி : ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்த ராதாரவி மேடை என்று வந்துவிட்டால் நடிகர் நடிகைகளை எல்லாம் போடா, போடி என பேசுவது அவருடைய ஸ்டைல். நயன்தாராவை பற்றி இவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

5. மிஸ்கின் :  தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறார். கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார் சமீப காலமாக திமிராக பேசிவது, திமிராக நடந்து வருகிறார் என ஒரு குற்றச்சாட்டு இறந்து வருகிறது.