GOAT படத்தில் மெயின் வில்லனே இவர் தான்.? அட இவர் முதுகுக்கு பின்னால் குத்துவாரே..

GOAT : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்பொழுது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் படத்தின் படப்பிடிப்பு பூஜையை போட்டு பாடல் காட்சியுடன் தொடங்கினார்கள்.

மேலும் படத்திற்கு கிரேட்டஸ்ட் ஆஃப் தி ஆல் டைம் என வைத்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் பெயரே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா அவர்களுடன் இணைந்து அஜ்மல் ஜெயராம், மைக் மோகன், வைபவ் பிரேம்ஜி அமரன், சினேகா, லைலா மீனாட்சி சவுத்ரி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள் .

புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.! அட கோலிவுட்டின் பிரபல நடிகையா..

மேலும் பிரசாந்த் மற்றும் மைக் மோகன் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்கள் அதனால் விஜயுடன் எப்படி நடித்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் சென்னையில் ஷூட்டிங் தொடங்கியது இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக தாய்லாந்தில் நடந்தது அங்கு முக்கிய ஆக்சன் காட்சிகளை நிறைவு செய்துவிட்டு துருக்கி சென்ற பட குழு தற்பொழுது இலங்கையில் படபிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பின் சூட்டிங் முடிய இருக்கிறது மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாடத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு மேலும் இந்த திரைப்படம் டைம் டிராவல் ஜானரில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது இதில் மொத்தம் இரண்டு விஜய் என்றும் அதில் அப்பா விஜய்க்கு நண்பர்களாக பிரபுதேவா மற்றும் பிரசாந்த் அஜ்மல் உள்ளிட்டோர் வருவார்கள் என ஒரு தகவல் வெளியாகிறது.

புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.! அட கோலிவுட்டின் பிரபல நடிகையா..

மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரிசையாக வெளியாகிக் கொண்டிருந்தது ஒரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர்கள் வரும்படியான ஸ்டில் பலரையும் கவர்ந்தது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மெயின் வில்லன் யார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அதன்படி அப்பா விஜய்க்கு நண்பராக வரும் அஜ்மல் தான் மெயின் வில்லனாக இருப்பார் என கூறப்படுகிறது இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் எங்கேயோ இதே காட்சியை பார்த்தது போல் இருக்கிறது என கோ பட சீனை படத்தில் வைத்து விட்டார்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள் ஏனென்றால் கோ திரைப்படத்தில் ஜீவாவுக்கு நண்பனாக இருந்து பிறகு வில்லனாக மாறுவார் அஜ்மல் என்பது குறிப்பிடத்தக்கது.