2024-ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் ஐந்து தமிழ் திரைப்படங்கள்

Tamil Movies: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 2024ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் 5 படங்கள் குறித்து பார்க்கலாம். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அப்படி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி 5 படங்கள் போட்டி போட உள்ளது.

1. கேப்டன் மில்லர்: தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படம் அதிரடியான திர்லர் கதைய அம்சத்துடன் உருவாகி வரும் நிலையில் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், நிவேதிகா சதீஷ், சுதீப் கிஷான் ஆகியோர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை தியாகராஜன் சத்யா ஜோதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க லைக்கா நிறுவனம் கேப்டன் மில்லர் படத்தினை விநியோகம் செய்ய உள்ளது. இப்படம் 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

2. லால் சலாம்: இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணுகாந்த், விஷ்ணு விஷால், நிரோஷா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகின்ற 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. லால் சலாம் படத்தினை சுபாஷ்கரன் லைக்கா நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

3. அயலான்: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். டி ராஜா தனது 24 நிறுவனத்தின் மூலம் தயாரிக்க கே கே ஆர் நிறுவனத்தின் கே. ராஜேஷ் படத்தினை விநியோகம் செய்ய உள்ளார்.

கஜினி படத்தில் அஜித்.. சஞ்சய் ராமசாமியாக மிரட்டறாரே.. முருகதாஸ் வைத்த டிமாண்ட் இதுதானா.?

4. மெர்ரி கிறிஸ்மஸ்: ஸ்ரீராம் ராகவன் இயக்க விஜய் சேதுபதி, ராதிகா ஆப்தே, கத்ரீனா கைஃப், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வருகின்ற 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகிறது.

5. அரண்மனை 4: சுந்தர் சி இயக்கி வரும் திகில் திரில்லர் படமாக அரண்மனை 4 வருகின்ற 2024ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.