லால் சலாம் போல் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்த திரைப்படங்கள்.! ஆத்தாடி லிஸ்ட் பெருசா போகுதே..

Rajinikanth Movie: வயதானாலும் மார்க்கெட் குறையாமல் அதே ஸ்டைலுடன் தற்பொழுது வரையிலும் நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கியமாக ரஜினியின் திரைப்படங்களுக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வில்லனாக அறிமுகமான இவர் ஹீரோவாகவும், 2 ஹீரோக்களில் ஒருவராகவும், வில்லனாகவும் 171 படங்கள் வரை நடித்துள்ளார். மேலும் சில நிமிடங்கள், சில வினாடிகள் என கௌரவத் தோற்றத்திலும் இவர் நடித்த திரைப்படங்கள் உள்ளது.

தூக்கத்தில் வெயிட்டர் போல் உளறி மாட்டிக்கொண்ட மனோஜ்.. ஆசை ஆசையாக ரோகிணி வாங்கிட்டு வந்த மசால் தோசையை சாப்பிட்ட முத்து.. வெடித்தது பிரச்சனை..

அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இதுவரையிலும் ஒரு திரைப்படத்தில் கூட ரஜினி நடித்தது கிடையாது ஏனென்றால் இவர் தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வந்ததால் தனது மகள்களின் திரைப்படங்களில் நடிக்க தயக்கம் காண்பித்துள்ளார்.

பிறகு லால் சலாம் படத்தில் தனது மகளிடம் தானே வாய்ப்பு கேட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருக்கும் நிலையில் ரஜினியின் என்ட்ரி மாசாக இருப்பதாக தொடர்ந்து ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து  வருகின்றனர். இவ்வாறு ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சில திரைப்படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

தூக்கத்தில் வெயிட்டர் போல் உளறி மாட்டிக்கொண்ட மனோஜ்.. ஆசை ஆசையாக ரோகிணி வாங்கிட்டு வந்த மசால் தோசையை சாப்பிட்ட முத்து.. வெடித்தது பிரச்சனை..

பாவத்தின் சம்பளம் (1978)

தாயில்லாமல் நானில்லை (1979)

நட்சத்திரம் (1980)

நன்றி மீண்டும் வருக (1982)

அக்னி சாட்சி (1982)

யுத்த காண்டம் (1983)

உருவங்கள் மாறலாம் (1983)

சஷ்டி விரதம் (1983)

சித்திரமே சித்திரமே (1985)

யார் (1985)

கோடை மழை (1985)

மனதில் உறுதி வேண்டும் (1987)

வள்ளி (1993)

மற்ற மொழிப் படங்கள்: அபராஞ்சி – கன்னடம் (1984)

நியாயம் மீரே செப்பாலி – தெலுங்கு (1985)

கிராப்தர் – ஹிந்தி (1985)

டாகூ ஹசினா – ஹிந்தி (1987)

கைர் கனூனி – ஹிந்தி (1989)

பாக்ய தேவதா – பெங்காலி (1995)