போலீசாக மிரட்டி விட்ட விஜயகாந்த்.. எத்தனை திரைப்படத்தில் போலீஸ் கெட்டப் தெரியுமா..?

vijayakanth : சினிமாவில் போலீஸ் கெட்டப் என்றால் ஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் ஏனென்றால் போலீஸ் கம்பீரம் கெத்து இது அனைத்தும் எல்லா நடிகர்களுக்கும் இருக்காது அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி அடுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியவர் விஜயகாந்த் தான்.

அதேபோல் விஜயகாந்த் நடித்த போலீஸ் கதாபாத்திர திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அந்த வகையில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளார். அந்த வகையில் ஆபாவாணன் இயக்கத்தில் உருவாக்கிய ஊமை விழிகள் திரைப்படத்தில் சில நிமிடங்கள் விஜயகாந்த் நடித்திருந்தாலும் போலீஸ் கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருப்பார்.

நண்பனுக்கு சரக்கை ஊத்தி கொடுத்து படுக்க வைத்து விட்டு நண்பனின் மனைவியுடன் நடிகர் செய்த செயல் .! அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் கணவர்..

இதனைத் தொடர்ந்து படத்தில் முழுவதும் போலீஸ் வேடத்தில் நடித்த விஜயகாந்த் சத்ரியன் திரைப்படம் தான் மாநகர காவல் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தர்மம் வெல்லும் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதில் ஒருவர் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

அதேபோல் கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம், சந்தன காண்டத்தில் வீரப்பன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் மேலும் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் வீரம் வெளஞ்ச மண்ணு, இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் போலீஸ்கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

நடிகர் திகலம் சிவாஜியால் முடியாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. கருப்பு எம்ஜிஆர் – னா சும்மாவா.?

அதுமட்டுமில்லாமல் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்திலும் சரத்குமார் உடன் விஜயகாந்த் நடித்த தாய் மொழி திரைப்படத்திலும் போலீஸ் கெட்டப்பில் நடித்த அசத்தியிருந்தார் அந்த வகையில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சிறப்பான திரைப்படங்களில் ஒன்றுதான் சத்ரியன். இந்தத் திரைப்படமும் விஜயகாந்துக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்தது.

மேலும் ஹானஸ்ட் ராஜ் வல்லரசு வாஞ்சிநாதன் என இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி போலீஸ் அதிகாரியாகவும் காவல் துறையினருக்கும் காவலர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விஜயகாந்த் இப்படி எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரும்பு ராடை தூக்கிக்கிட்டு அடிக்க போன கேப்டன் விஜயகாந்த்.. வெடவெடுத்து நின்ற இயக்குனர் பாரதிராஜா..! உண்மையாகவே நடந்த சம்பவம்