இரும்பு ராடை தூக்கிக்கிட்டு அடிக்க போன கேப்டன் விஜயகாந்த்.. வெடவெடுத்து நின்ற இயக்குனர் பாரதிராஜா..! உண்மையாகவே நடந்த சம்பவம்

கேப்டன் விஜயகாந்த் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய ஒரு பணக்காரர் ஆனால் சினிமாவின் மீது இருந்த காதலால் சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டு சின்ன சின்ன படங்களில் நடித்து பின் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார். அதன் பிறகு வெற்றிகளை மட்டுமே அள்ளி ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்தார்.

தான் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார் அதனாலயே கருப்பு எம்.ஜி.ஆர். என செல்லமாக அழைக்கப்பட்டார். அதன் பிறகு கட்சி தொடங்கி நல்லபடியாக போய்க் கொண்டிருந்த விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருடைய இரங்களுக்கு பல திரை பிரபலங்களும் தொண்டர்களும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் vs ராமராஜன் : 25 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?

வரமுடியாதவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் பலருக்கும் அள்ளி கொடுத்து தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அதே அளவிற்கு யாராவது தப்பாக நடந்து கொண்டால் அதை எதிர்த்து கேட்கும் முதல் ஆளாகவும் கேப்டன் விஜயகாந்த் இருக்கிறார் அப்படி ஒரு சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் தமிழ்ச்செல்வன் இந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் உள்ள மைசூர் பகுதியில் இருக்கும் கொல்லேகல் பகுதியில் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது அப்பொழுது வட்டாள் நாகராஜ் தனது கட்சி ஆட்களுடன் வந்து தமிழ்ச்செல்வன் கிளாப் போர்டு இருக்காது  என கூறி இருக்கிறார். இதனை அடுத்து அங்கு போலீஸ் குவிந்தது.

விருந்துக்கு ரெடியான கெடா.. தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் இதுவா.? அப்ப மட்டும் பேசினீங்களே இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க.. தயாரிப்பாளரை சீண்டும் ரசிகர்கள்

ஆனாலும் வட்டாள் நாகராஜ் தனது ஆட்களுடன் அராஜகம் செய்துள்ளார் அப்பொழுது விஜயகாந்த் வந்து என்ன பிரச்சனை என கேட்க விஷயத்தை பாரதிராஜா கூறியிருக்கிறார் உடனே கேப்டன் விஜயகாந்த் காரில் இருந்து ஒரு இரும்பு ராடை எடுத்துக்கொண்டு வட்டாள் நாகராஜ் இருக்கும் இடத்திற்கு சென்று நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா வா மோதி பார்த்துக்கலாம் என கூறி இருக்கிறார்.

வெடவெடுத்து போன வட்டாள் நாகராஜ் தனது ஆட்களுடன் திரும்பி சென்றார் அதன் பிறகு பாரதிராஜா கிளாப் போரில் தமிழ்ச்செல்வன் என்ற பெயரை மாற்றி விடலாம் என கூறியிருக்கிறார் உடனே விஜயகாந்த் படத்தை பெயரை  மாற்றினால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார். பாரதிராஜா பிறகு பேரை மாற்றாமல் விஜயகாந்தை வைத்து தமிழ்ச்செல்வன் படத்தை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது