விருந்துக்கு ரெடியான கெடா.. தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் இதுவா.? அப்ப மட்டும் பேசினீங்களே இப்ப ஏன் அமைதியா இருக்கீங்க.. தயாரிப்பாளரை சீண்டும் ரசிகர்கள்

Thalapathy 68 Update: தளபதி 68 படத்தில் டைட்டில் மோஷன் போஸ்டருடன் ரெடி ஆகிவிட்டதாகவும் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இதற்காக சில தலைப்புகள் வெளியாகி இதுதான் உறுதியான டைட்டில் என சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஏற்கனவே ஒரு முறை சில டைட்டில்கள் வெளியான நிலையில் இந்த டைட்டில்கள் கிடையாது என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார் ஆனால் இந்த முறை எதுவுமே கூறாமல் இருந்து வருகிறார். இந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ இரண்டு திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தியது.

ரஜினியின் தில்லு முல்லு திரைப்படத்தில் நடித்த சிறுவன் மரணம்.. கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் ஆசை

அந்த வகையில் 2023ல் தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவித்த நாயகனாக விஜய் மாறி உள்ளார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, மோகன், ஜெயராம், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்புகள் மிகவும் விருப்பம் நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு தளபதி 68 படத்தில் டைட்டில் பாஸ் மற்றும் பாஸல் இரண்டில் ஒன்று என கூறப்பட்டது ஆனால் இந்த இரு தலைப்புகளும் இல்லை என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார். ஆனால் இதனை அடுத்து GOAT என்ற டைட்டிலை தான் வெங்கட் பிரபு வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது ஆனால் இதனை இதுவரையிலும் அர்ச்சனா கல்பாத்தி மறுக்கவில்லை. 

அவமானங்களை கடந்து தடைகளை தகர்த்தெறிந்து முத்திரையை பதித்த கேப்டன் விஜயகாந்த்..

ஏனென்றால் இதுதான் ஒரிஜினல் டைட்டில் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக டைட்டில் லீக் ஆனதால் விஜய்யிடம் வெங்கட் பிரபு வேறு டைட்டில் மாத்தி விடலாமா என கேட்க ஆனால் விஜய் இந்த டைட்டில் தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது இதுவே இருக்கட்டும் என கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.