ரஜினியின் தில்லு முல்லு திரைப்படத்தில் நடித்த சிறுவன் மரணம்.. கடைசி வரை நிறைவேறாமல் போன அவரின் ஆசை

Actor Rajinikanth: ரஜினிகாந்த் படத்தில் சிறுவனாக நடித்த பிரபல நடிகர் சமீபத்தில் உயிரிழந்திருக்கும் நிலையில் இவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியினை பெற்றுள்ளது.

அந்த வகையில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ரஜினியின் படங்களில் ஒன்று தான் தில்லு முல்லு இந்த படத்தினை மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்க ரஜினிகாந்த் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடிப்பை தாண்டி இந்த படத்தில் கமல்ஹாசன், சாருஹாசன் ஆகியோர்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

அவமானங்களை கடந்து தடைகளை தகர்த்தெறிந்து முத்திரையை பதித்த கேப்டன் விஜயகாந்த்..

மேலும் இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாஸ்டர் சந்திரசேகரன். இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து ஏமாற்றுவதை கண்டுபிடித்து ரஜினிகாந்தை மிரட்டி பணம் பறிக்கும் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் மாஸ்டர் சந்திரசேகரன்.

தில்லு முல்லு படத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை சமீபத்தில் இவர் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாஸ்டர் சந்திரசேகரன் இறந்திருக்கிறார்.

thillu mullu
thillu mullu

தற்பொழுது இவருக்கு 59 வயதாகும் நிலையில் இவருடைய ஆசை ஒன்று நிறைவேறாமல் போய் உள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்தை ஒரே ஒரு முறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஆசைப்பட்டு இருக்கிறார் அதற்கு முயற்சியும் செய்திருக்கிறார் ஆனால் அது முடியவில்லை.

அட விடுங்கப்பா என்னோட கண்ணு பிரச்சனை என்று அவங்களுக்கு தெரியாது.! கிண்டலையும் கேலியையும் பொறுத்துக் கொண்ட விஜயகாந்த்

பேட்டி ஒன்றில் இவருடைய மகன் கார்த்திக் அப்பாவுக்கு ரஜினி சாரை மீட் பண்ண வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை நாங்களும் அதற்காக முயற்சி எல்லாம் செய்து கொண்டு இருந்தோம் ஆனால் என்னுடைய அப்பாவிற்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனை அட்மிட் செய்திருந்தோம் கடைசி வரைக்கும் அப்பாவுடைய ஆசையை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என மன வேதனையாக தெரிவித்திருந்தார்.

 Master Chandrasekaran
Thillu Master Chandrasekaran