அட விடுங்கப்பா என்னோட கண்ணு பிரச்சனை என்று அவங்களுக்கு தெரியாது.! கிண்டலையும் கேலியையும் பொறுத்துக் கொண்ட விஜயகாந்த்

Actor Vijayakanth: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்திருக்கும் நிலையில் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஏராளமான பிரபலங்கள் நடிகர் விஜயகாந்த் குறித்து பழைய நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் ரஞ்சித் பகிரந்திருக்கும் தகவல் குறித்து பார்க்கலாம்.

பல அவமானங்களுக்கும் தடைகளுக்கும் பிறகு சினிமாவில் உயர்ந்து காண்பித்த விஜயகாந்த் தன்னால் முடிந்த வரை பலருக்கும் உதவி செய்தார். கருப்பாக இருப்பதனால் ஆரம்ப காலகட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விஜயகாந்த் ஹீரோவாக நடித்து ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். இதன் மூலம் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் நடித்து விஜயகாந்த் ரஜினி, கமல்ஹாசனுக்கு போட்டியாளராக திகழ்ந்தார் அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருக்கும் அரசியலிலும் கடும் போட்டியாக இருந்தார். விஜயகாந்த் அரசியலில் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டது எனவே அறுவை சிகிச்சை முடித்துவிட்டு ஓய்வில் இருந்து வந்தார்.

கேப்டன் என்ற அடைமொழிக்கு பின்னால் இருக்கும் சுவாரசியமான கதை இதுதான்..

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை அளிக்கப்பட ஒரு கட்டத்தில் பயன் அளிக்காத காரணத்தினால் இன்று காலை உயிரிழந்தார். தற்பொழுது இவருடைய உடல் வீட்டிலிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் பார்த்து என்னோடு பழகி நடிகர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர். என் மீது பாசம் கொண்டவர்.. உதவி கேட்டு வந்தவருக்கு இயன்றதை செய்தவர்.. தன் ரசிகர்களுக்கும் ஏழை மக்களுக்கும் தன் பணியாளர்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்தவர்.. தன் சொந்த சம்பாத்தியத்தில் தினமும் மூன்று நேரமும் ஏழைகளுக்கு அன்னதானமிட்டு அன்னை ஆனவர்.

அரசியலுக்கு வந்தபின் பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பில் என்னோடு கைப்பிடித்து நடக்கையில் அவர் தடுமாறிய பொழுது சுற்றி நின்ற பொதுமக்கள் ஏதோ அவர் போதையில் இருப்பதாக கேலி கிண்டலுமாக சிரித்தனர். எனக்கு கோபம் வந்து திட்ட ஆரம்பிக்கும் முன் என் கையை இருக்க பிடித்து அவர் வேண்டாம் ரஞ்சித் எனக்கு இருக்கும் கண் பிரச்சனை மக்களுக்கு தெரியாது விடுங்க.

ஏழை மாணவிக்கு டாக்டர் சீட்.. கண்ணை மூடிக்கொண்டு கொடை வள்ளல் போல் உதவி செய்த விஜயகாந்த்.. இரக்கத்தின் மறுபிறவியை இவர்தான்..

தம்பி நமக்கு அரசியல் காரங்களுக்கும் ஊடகங்களுக்கும் செஞ்ச சேவையால கிடைச்ச நல்ல பேரு என்றார். ஒரு நாள் அவரை மேடை மேடையாக கேவலமாக திட்டி விமர்சித்த ஒரு நடிகர் திடீரென்று தளத்திற்கு வந்து நலம் விசாரித்தார். அவர் அப்படி அரசியல் மேடையில் திட்டியதற்கு மன்னிப்பு கேட்டார், கேப்டன் உடனே அவர் கையை பிடித்து மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க நீங்க யாரை திட்டினீங்க என்னை தானே இந்த உரிமை கூட உங்களுக்கு இல்லையா என அவரிடம் கூறி அனுப்பிய பின் என்னிடம் தனியாக அந்த நடிகர் நல்லவர் பாவம் என்னைய பத்தி திட்றதுக்கு தான் இவங்க காசு கொடுக்குறாங்க அதனாலதான் எல்லாருமே என்னைய திட்டுறாங்க.

இவங்களா திட்டல திட்ட வைக்கிறாங்க எல்லாரும் நல்லா இருக்கட்டும் என தோளில் தட்டியவாறு வெகுளியாக சிரித்தார். என் மனம் நனைந்தது ஒன்றா இரண்டா இவரை பற்றி சொல்ல உண்மையிலேயே நல்ல மனுஷங்க.. நல்ல மனிதம் நமக்குள் சுவாசித்துக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.