கேப்டன் என்ற அடைமொழிக்கு பின்னால் இருக்கும் சுவாரசியமான கதை இதுதான்..

Captain Vijayakanth: நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார் இவரை மக்கள் கேப்டன் என அழைப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக கலக்கி வந்த நடிகர் விஜயகாந்த் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து கமல், ரஜினிகாந்தை ஓவர் டேக் செய்தார்.

இவருடைய படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க தொடங்கியது அப்படி ஒரே வருடத்தில் 10 முதல் 18 படங்கள் வரையிலும் நடித்து சாதனை படைத்தார். பொதுவாகவே விஜய்காந்த்விற்கு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்துள்ளது சொக்கத்தங்கமான கேப்டன் விஜயகாந்த் தன்னை தேடி வரும் அனைவருக்கும் உதவி செய்தார்.

ஏழை மாணவிக்கு டாக்டர் சீட்.. கண்ணை மூடிக்கொண்டு கொடை வள்ளல் போல் உதவி செய்த விஜயகாந்த்.. இரக்கத்தின் மறுபிறவியை இவர்தான்..

மேலும் தன்னை பார்க்க வரும் யாரும் பசியுடன் போக கூடாது என அனைவருக்கும் சாப்பாடு போட்டு வயிறு நிறைய வைத்தார். இவ்வாறு மக்கள் மனதை வென்ற விஜயகாந்திற்கு கேப்டன் என பெயர் வருவதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் திரைவுலகில் பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஜயகாந்த் 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் படத்தில் ஆரம்பித்து 2000ஆம் ஆண்டு வெளியான வல்லரசு படம் வரையிலும் காவல் அதிகாரியாக கலக்கிய உள்ளார்.

இவரது 100வது படம் தான் கேப்டன் பிரபாகரன் 1991ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜயகாந்த் தமிழ்நாடு வனத்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரும் தமிழ் ஈழ போராளியும் ஆன வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களின் நாயகன் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்தை அடக்கம் செய்யப்படும் இடம் இதுதானா.. இதோ முழு விவரம்

இப்படத்தின் வசனங்கள், விஜயகாந்த் நடிப்பு என மாபெரும் வெற்றினை பெற இப்படத்தில் இருந்து நடிகர் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயரால் மக்கள் கொண்டாடினர். காவல் அதிகாரியாகவோ இந்திய ராணுவத்தை சேர்ந்தவராகவோ இல்லாத ஒரு நடிகரை ஏன் கேப்டனாக அழைக்க வேண்டும் என்று விஜயகாந்த் அரசியலில் ஆக்டிவாக இருந்த பொழுது எழுப்பப்பட்டது. ஆனால் அனைத்தையும் உடைத்து விஜயகாந்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்ததால் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டனர்.