கேப்டன் விஜயகாந்த் நடித்து தோல்வியான படங்கள்.. லிஸ்ட் பெருசா போகுது.?

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் சினிமா உலகில் பல வெற்றிகளை கொடுத்திருந்தாலும், நிஜத்திலும் நல்ல உள்ளம் கொண்டவராக இருந்ததால் பலருக்கும் பிடித்தவராக இருந்தார் அதனாலயே விஜயகாந்தை பலரும் கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன் என செல்லமாக அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திடீரென அரசியல் பிரவேசம் கண்டு அங்கேயும் வெற்றிகளைக் கொண்டு வந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். அதன் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை சந்தோஷத்தில் அழுத்தியது.  இந்த நிலையில் விஜயகாந்த் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு சில தோல்வி படங்களையும் கொண்டிருக்கிறார் அது பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

ரகுவரன் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்.! அவரின் சகோதரர் கூறிய பரபரப்பு தகவல்..

கஜேந்திரா : ரஜினியை வைத்து பல படங்களை எடுத்த சுரேஷ் கிருஷ்ணா விஜயகாந்தை வைத்து எடுத்த திரைப்படம் தான் கஜேந்திரா படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் மற்றும் எமோஷனல் என இருந்தது. விஜயகாந்துடன் இணைந்து சரத்பாபு, ராதா ரவி, ரமேஷ் கண்ணா, வினி சக்கரவர்த்தி, ராஜ்கபூர், மகாநதி சங்கர், சீதா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

சபரி : சுரேஷ் இயக்கத்தில்  2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து ஜோதிமயி, மாளவிகா, பிரதீப் ராம் சிங் ராவத், டெல்லி கணேஷ், மகாதேவன், ஐஸ்வர்யா, மாளவிகா அவிநாசி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்.. தமிழ்நாட்டில் இருக்கவே தகுதி இல்லை என கொந்தளித்த கூல் சுரேஷ் – பிக்பாஸ் ப்ரோமோ

தர்மபுரி : 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த், லஷ்மி ராய், விஜயகுமார், ராஜ்கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை பேரரசு இயக்கியிருந்தார் படம் அதிரடியான ஆக்சன் பஞ்ச் டயலாக் என அனைத்தும் இருந்தாலும் படம் ரசிகர்களை கவரவில்லை.

நெறஞ்சமனசு : விஜயகாந்த் நடிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வினு சக்கரவர்த்தி, மன்சூர் அலிகான், செந்தில், சம்பத்ராஜ், மனோரம்மா, சூசன் கலர் நடித்திருந்தனர். படம் எமோஷனல் ஆக்சன் படமாக இருந்தாலும் படம் வெற்றி பெறவில்லை.