நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்.. தமிழ்நாட்டில் இருக்கவே தகுதி இல்லை என கொந்தளித்த கூல் சுரேஷ் – பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo : தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றன.. இதில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன அதன் மூலம் போட்டியாளர்களுக்கிடையே சில சண்டை சச்சரவும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்ற வாரம் கூட நிக்சன் மற்றும் அர்ச்சனாவிற்கிடையே பல வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது நிக்சன் அர்ச்சனாவை பார்த்து நீ பொண்ணே இல்ல, சீ போடி, சொறிகிடுவேன் என்று பல வார்த்தைகளை பயன்படுத்தினார் இதன் மூலம் வார இறுதி கமல் எபிசோடில் அர்ச்சனா நிக்சனுக்கு எதிராக உரிமைக்குரல் தூக்கிருந்தார்.

கனவுல ஈபிள் டவர் கட்டலாம் நிஜத்துல கக்கூஸ் கூட கட்ட முடியாது.. காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அதற்கு கமலஹாசன் நிக்சனுக்கு வார்னிங் கொடுத்தார்.. மேலும் மிக்ஸாம் புயல் காரணமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருந்ததால் நேற்றைய எவிக்க்ஷன் ரத்து செய்யப்பட்டு இருந்தது அதனால் போட்டியாளர்கள் சந்தோஷமடைந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் 7 இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் இந்த வார எவிக்சன் ப்ராசஸ் இருக்கு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.அப்பொழுது அர்ச்சனா நான் நிக்சனை நாமினேட் செய்றேன், அது ஏன் என்று உங்க எல்லாருக்குமே தெரியும் என்று நிக்சன் உடைய ட்ரெஸ்ஸை வாங்கிக் கொண்டு குப்பை தொட்டியில் போட்டார். அதேபோல் விஷ்ணு பூர்ணிமாவை நாமினேட் செய்து அக்செப்ட்டென்சி உங்க டிக்ஷனரில இருக்கானே தெரியல என்று சொன்னார்.

2வது குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் கின்னஸ் பக்ரு..

விசித்திரா எனக்கும் தினேஷ்க்கும் இருக்கிற பிரச்சனை உங்க எல்லாருக்குமே தெரியும் என்று தினேஷை நாமினேட் செய்தார்.. பிறகு கூல் சுரேஷ் விசித்ரா உடைய டிரெஸ்ஸை வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டு நீங்க தமிழ்நாட்டிலேயே இருக்க தகுதி இல்லை என்று கூறிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளன..