2வது குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் கின்னஸ் பக்ரு..

Guinness Pakru: நடிகர் கின்னஸ் பக்ரு சமீபத்தில் தனது இரண்டாவது மகள் பெயர் சூட்டு விழாவை திருவிழா போல் பிரம்மாண்டமாக நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் கின்னஸ் பக்ரு.

இவர் உயரம் காரணமாக பல படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் சூர்யாவின் 7ம் அறிவு, விஜய்யின் காவலன் உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான பஹீரா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

சொந்தக்காரங்களே கை கொடுக்காத விக்ரமை தூக்கி விட்ட சேது படம்.! மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..

இவ்வாறு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் நடிப்பதை தொடங்கினார். தற்பொழுது தனது சிறந்த நடிப்பினால் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பக்ரு தமிழில் டிஷ்யூம் படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

guinness pakru
guinness pakru

நடிப்பதை விட மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களை இயக்கி வரும் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் சமீபத்தில் தான் பக்ருவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

அட, இவர்தான் மெட்ராஸ் பட ஜானியா.! ஹீரோ போலிருக்கும் இவரைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்..

guinness pakru
guinness pakru

இது குறித்து தன்வே சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்த நிலையில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது இரண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை பிரமாண்டமாக நடத்திய உள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

guinness pakru
guinness pakru