ரகுவரன் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்.! அவரின் சகோதரர் கூறிய பரபரப்பு தகவல்..

Raghuvaran : எவர்கிரீன் வில்லன் நடிகர் என்றால் அது ரகுவரன் தான் ரகுவரன் உயிரிழப்பு குறித்து அவரது சகோதரர் ராமேஷ்வரன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மிக முக்கிய வில்லன் நடிகராக இருந்தவர் நடிகர் ரகுவரன் இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரகுவரனின் மறைவு சினிமாவில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

49 வயதில் கடந்த 2008 மார்ச் 19ஆம் தேதி இவர் இந்த உலகை விட்டு பிரிந்தார். நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகனும் இருக்கிறார் இதனால் ரகுவரன் உயிரிழப்பு குறித்து அவருடைய சகோதரர் ரமேஷ்வரன் youtube சேனல் உங்களுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு தந்தையாக நடிக்க ரகுவரனை அணுகினார்கள்.

கனவுல ஈபிள் டவர் கட்டலாம் நிஜத்துல கக்கூஸ் கூட கட்ட முடியாது.. காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அப்பொழுது இயக்குனர் யாரடி நீ மோகினி கதையை கூறினார் ஆனால் அவர் கூறிய கதை தன்னுடைய மகன் ரிஷியை நினைவு படுத்தியதால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ரகுவரன் ஒப்புக்கொண்டார் யாரடி நீ மோகினி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் ரகுவரனின் கதாபாத்திரம் மக்கள் மனதில் நிலைத்து நின்றது.

படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு நிம்மதியாக இருந்தார் ரகுவரன் ஆனால் அவர் மனதில் சோர்வு காணப்பட்டது அதற்குப் பிறகு யாருடனும் அவர் பேசவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரகுவரன் உயிரிழந்து விட்டார் யாரடி நீ மோகினி படம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் நாலாம் தேதி தான்  வெளியானது ரகுவரன் அளவுக்கு மீறி மது அருந்துவதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது ஆனால் அவருடைய சகோதரர் அவருக்கு மிகுந்த மன அழுத்தம் அதிகமானதால் தான் அவர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார்.

சரி வா அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கலாம்ன்னு கேட்டதே அந்த நடிகை தான்.. சிங்கிக்கொண்டு தவித்த இயக்குனர்..

இன்று பிறந்தநாள் காணும் ரகுவரன் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தாலும் இந்த  உலகத்தை விட்டு பிரிந்து விட்டார் அவரின் நடிப்பு இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காது..