குணசேகரனுக்கு சவால் விடும் சக்தி.. நினைத்தது போலவே ஈஸ்வரியை வேலையை விட்டு தூக்க போட்ட சரியான பிளான்! வேலையே வேண்டாம் என கும்பிடு போட்டு கிளம்பிய மருமகள்

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா இறந்ததாக கூறப்படும் நிலையில் இவருடைய இறப்பிற்கு காரணமானவரை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என சக்தி, ஜனனி பல முயற்சிகளை சந்தித்து வருகின்றனர். அப்படி சாருலதாவிடம் அப்பத்தாவின் கேசில் என்ன நடந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள நியாயமான ஒருவர் வேண்டும் அதற்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் என்று ஜனனி உதவி கேட்கிறார்.

இதற்கு சாருலதாவும் ஒத்துக் கொண்டு உதவி செய்கிறார் அப்படி நேற்று குணசேகரன் எழுதிக் கொடுத்த கேஷை விசாரிக்கவில்லை என்றும் அவர் சொன்னதை அப்படியே எழுதி வைத்திருப்பதாகவும் மற்றொரு ஜட்ஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு இது ஒரு புறம் போய்க்கொண்டிருக்க ஈஸ்வரி சமீப காலங்களாக ஸ்கூல்க்கு வேலைக்கு செல்வதால் வேலைக்கு போகக்கூடாது என குணசேகரன் மிரட்டி வருகிறார்.

ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு வர சம்மதித்த அண்ணாமலை. ஆனா ஒரு கண்டிஷன் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ஆனால் ஈஸ்வரி நான் வேலைக்கு போயே தான் ஆகுவேன் என திமிரு காட்டுகிறார். இந்த சூழலில் சக்தி அப்பத்தாவின் கேசில் தீர விசாரிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கும் நிலையில் இதனை தெரிந்து கொண்ட குணசேகரனின் ஆள் போன் பண்ணி உண்மைகளை சொல்கிறார். எனவே இதனால் ஜனனி தன் மீது இருக்கும் தப்பை கண்டுபிடித்து விடுவாரோ என குணசேகரன் பயப்படுகிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் இன்றைய ப்ரோமோவில் சக்தி ஞானத்திடம் அனைவரும் முன்பும் அப்பத்தாவின் விஷயத்தில் உண்மையை தெரிந்து கொள்ளாமல் விடமாட்டோம் கூடிய சீக்கிரமா தப்பு பண்ணவன கண்டுபிடித்து விடுவோம் என்று கூறுகிறார். மறுபுறம் சக்தி, ஜனனி ஈஸ்வரி வேலை செய்து கொண்டிருக்கும் ஸ்கூலுக்கு செல்ல அங்கு ஒரே ஒரு முறை ரிக்வெஸ்ட் பண்ணுனா ஒத்துப்பாங்க அக்கா என்று ஜனனி கூறுகிறார்.

கே.ஜி.எஃப் புகழ் யாஷின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?

இதற்கு ஈஸ்வரி வேண்டாம் ஜனனி என்னால ஒர்க் பண்ண முடியாது என சொல்கிறார். இந்த நேரத்தில் குணசேகரன் தனது தம்பிகளுடன் ஸ்கூல்க்கு வர ஈஸ்வரினு ஒருத்தி கிளாஸ் எடுக்க வந்திருக்காளே எங்க இருக்கா என்று ஒருவரிடம் கேட்கிறார். பிறகு கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் அனைவரும் செல்ல இவர்களுக்கு எதிராக ஜனனி, சத்தி, ஈஸ்வரி நடந்து வருகின்றனர்.