சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை பாக்கியலட்சுமி சீரியலில் தூக்கி போட்ட சீரியல் குழு.! யாருன்னு பாத்தீங்களா..

Baakiyalakhmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது இந்த சீரியலுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் என்ட்ரி கொடுத்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் தான் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து வருகிறது. முத்து மீனாவின் கேரக்டர் ரசிகர்களை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படி டிஆர்பி-யில் முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை ஓவர் டெக் செய்து சிறகடிக்க ஆசை சீரியல் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சூர்யா மண் மிதித்ததை ராஜலட்சுமியிடம் போட்டு கொடுத்த சித்ரா தேவி.. வெடித்த புது பிரச்சனை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

எனவே இதன் காரணமாக சீரியல் குழுவினர்கள் இரண்டு சீரியலையும் மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்கின்றனர். அப்படி சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தாலியை கழட்டி கொடுத்திருப்பது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கணேஷ் விஷயத்தை எப்படி வீட்டில் கூறி பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் தந்தையாக நடித்து வரும் நடிகர் பாக்கியலட்சுமி சீரியலில் எழில நண்பனின் அப்பாவாக அறிமுகமாகிறார். இந்த காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நேற்று முடிந்திருக்கும் நிலையில் விரைவில் இவர் நடித்த எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. 

மூன்று காமெடி பீஸ் நடிகர்கள் வில்லனாக நடித்த கதை தெரியுமா..

இவ்வாறு டிஆர்பி-யில் டாப்பில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த சீரியல்களை பார்த்து வருகின்றனர்.