ரிலீஸ் ஆகாமல் பிரச்சனைகளை சந்தித்து வரும் எட்டு தமிழ் திரைப்படங்கள்.! புலி வருது புலி வருது என்ற கதைதான்..

Tamil Movies: முன்னணி நடிகர்களின் 8 தமிழ் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் தற்பொழுது வரையிலும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்து வருகிறது அப்படி அந்த 8 தமிழ் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

1. துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ராதிகா சரத்குமார், மாயா கிருஷ்ணன் என ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம் கடன் நெருக்கடி காரணத்தினால் வெளியில் வராமல் இருக்கிறது.

தற்பொழுது இறுதி கட்ட பணிகளும் முடிந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில் 2023, நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் இன்னும் கடன் பிரச்சனை முடியாத காரணத்தினால் ரிலீஸ் தேதி வைக்கப்பட்டுள்ளது.

2. சர்வர் சுந்தரம்: ஆனந்த் பல்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தில் வைபவ், சினேகன், ராதாரவி என ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் முழுவதுமாக சமையல் கலை மற்றும் அதன் பின்னணி நிகழ்வுகளை நகைச்சுவையாக கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளருக்கு கடன் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதனால் பல ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

3. அந்தணன்: தமிழ் திரைவுலகில் மூத்த நடிகரான தியாகராஜன் இயக்கத்தில் அவருடைய மகன் பிரசாந்த் தியாகராஜன் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் அந்தணன் படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ஆம் ஆண்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் இது அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

4. இடம் பொருள் ஏவல்: இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரின் நடித்திருக்கும் இப்படம் பலமுறை ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது வரையிலும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

5. பாரிஸ் பாரிஸ்: இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இப்படம் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது ஆனால் தற்பொழுது வரையிலும்  இப்படம் வெளியாகவில்லை.

6. நரகாசூரன்: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவான இப்படத்தில் சுதீப் கிஷான், ஆத்மிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். துருவங்கள் 16 வெற்றியினை தொடர்ந்து  கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த சூழலில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரையிலும் ரிலீஸ் ஆகாமல் படத்தின் ரிலீஸ்  தாமதமாகி வருகிறது.

கஜினி படத்தில் அஜித்.. சஞ்சய் ராமசாமியாக மிரட்டறாரே.. முருகதாஸ் வைத்த டிமாண்ட் இதுதானா.?

7.பார்ட்டி: தளபதி 68 படத்தினை இயக்கி வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய் சிவா, சத்யராஜ், நிவேதா பெத்துராஜ் போன்றவர்களின் நடிப்பில் உருவான படத்தினை டி சிவா தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் பிசியாக உள்ளார்.

8. டைட்டானிக் (காதலும் கவுந்து போகும்): ஜானகிராமன் இயக்கத்தில் தயாரிப்பாளர் சி வி குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா என ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்தனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது ஆனால் இருப்பினும் தற்பொழுது வரையிலும் இப்படம் வெளியாகவில்லை.