எஸ் ஜே சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Sj Suryah : எஸ் ஜே சூர்யா இயக்குனராகவும், நடிகராகவும் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறார். இவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று, நான்கு படங்களில் நடித்து விடுகிறார் அந்த வகையில் இந்த வருடத்தில் வெளியான மார்க் ஆண்டனி மற்றும் ஒரு சில திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்..

திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார் அவருடன் இணைந்து ராகவா லாரன்ஸ், பாவா செல்லதுரை, வாகை சந்திரசேகர், சத்யன், சைன் டாம் சக்கோ மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்தனர்.

ரஜினி ரசிகனாக இருந்து.. தளபதி ரசிகராக மாறிய அட்லீ.! இதோ அவரே கூறிய சுவாரசிய தகவல்

படம் சிறப்பாக இருந்தால் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனால் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது படம் வெளியாகி ஐந்து நாள் முடிவில் மட்டுமே 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருந்த நிலையில் ஆறாவது நாள் முடிவிலும் நல்ல வசூலை அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்து நாம் பார்க்க இருக்கிறோம். முதலில் எஸ் ஜே சூர்யா எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.

கருங்காலியால் காலியான லோகேஷ்… சிக்கிச் சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்.! அப்போ தனுஷ்..?

அதன்படி பார்க்கையில் அவர் இந்த படத்திற்காக 5 கோடி வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் எஸ் ஜே சூர்யாவின் நடிப்புக்கு இன்னும் இரண்டு, மூன்று கோடி சேர்த்து கொடுத்திருக்கலாம்  என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.