என் பலத்தை காண்பிக்க சரியான ஆள் இல்லை.. விஜயின் லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக வருவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் இரண்டாவது முறை கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது.

படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் என பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தை  மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்து வருகின்றனர்.

சல்லடை போன்ற ஆடையில் வரலட்சுமி.! அந்த இடத்தில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள்…

ஆனால் படத்தின் கதை ஏற்கனவே நாம் பார்த்த கதை என்பதால் கலவையான விமர்சனத்தையே பெற்று இதுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் லியோ படம் வசூலில் மட்டும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை படக்குழு எதிர்பார்த்ததைவிட நல்ல வசூலை பதிவு செய்ததால் கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழா நடைபெற்றது.

இதில் விஜய் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் என பலரும் கலந்து கொண்டனர் விழா சிறப்பாக நடந்து முடிந்தை தொடர்ந்து சக்சஸ் பார்ட்டி ஒன்றையும் நடத்தப் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் வெளியேறப் போகும் பிக்பாஸ் போட்டியாளர்.? ஒரு ஏழரை அவுட் – குஷியில் ரசிகர்கள்

இப்படியான நிலையில் லியோ திரைப்படம் இதுவரை உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி 586 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது ஆனால் தயாரிப்பு நிறுவனம் பக்கத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை.