இந்த வாரம் வெளியேறப் போகும் பிக்பாஸ் போட்டியாளர்.? ஒரு ஏழரை அவுட் – குஷியில் ரசிகர்கள்

Biggboss 7 : பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 -வது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி, அன்ன பாரதி போன்றோர் நாமினேஷன் மூலம் வெளியேறியிருக்கின்றனர். பாபா செல்லதுரை உடல் நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெக்கார்ட் பெற்று வெளியேறினார்.

சைனா -னு வச்சிருக்கலாம்.. ஜப்பான் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் சில பெண்களுக்கு சேஃப்டி இல்லை என அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விட்டனர் ஆனால் இதற்கு வெளியே ரசிகர்கள் பலரும் மறுப்பு தெரிவித்தனர்.. இதனிடயே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பிபி கோர்ட் டாஸ்க் நடைபெற்றது.

அதில்  போட்டியாளர்கள் அவர்களுக்கான வாதங்களை முன்வைத்து கேஸ் நடத்தினர்.. அதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டது.. இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் நாமினேஷனில் விஜே அர்ச்சனா, தினேஷ், ஐசு, பூர்ணிமா, விஜே பிராவோ, விசித்ரா போன்றோர் நாமினேட் ஆகியிருக்கின்றனர்.

கிளைமாக்ஸ் காட்சியில் தாரை தாரையாக கண்ணீர் வர வைத்த 5 படங்கள்.! காதலிக்காக உயிரை விட்ட ஹீரோ

இதில் அர்ச்சனா அதிக ஓட்டுகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதில் குறைந்த ஓட்டுகளை பெற்று பூர்ணிமா மற்றும் ஐசு இருவரும்  டேஞ்சர் சோனில் இருக்கிறார். அதனால் இந்த வாரம் கண்டிப்பாக பூர்ணிமா தான் எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.