சைனா -னு வச்சிருக்கலாம்.. ஜப்பான் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

Blue sattai maran: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கார்த்தி நடிப்பில் தீபாவளி ஸ்பெஷல் ஆக ரிலீசான ஜப்பான் படம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். கார்த்திக் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜப்பான் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.

தீபாவளி ஸ்பெஷல் ஆக நேற்று வெளியான ஜப்பான் படத்தில் கார்த்திவுடன் அனுமானுவேல், சுனில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக வைத்து ஜப்பான் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ஜப்பான் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். அதாவது “இந்த படத்தோட கதையை பத்தி பார்க்கணும்னா கோயம்புத்தூரில் ஒரு பெரிய நகை கடையில் 20 கோடி ரூபாய் நகையை அடிச்சுட்டு போயிடுறாங்க அங்கு இருக்கிற தடையத்தெல்லாம் வச்சி பார்க்கும்போது ஜப்பான் தான் கொள்ளை அடிச்சிட்டானு ஹீரோவை தேட ஆரம்பிக்கிறாங்க ஒரு பாயிண்ட்ல தான் தெரிய வருது ஹீரோவுக்கு அவரு பேர பயன்படுத்தி எவனோ ஒருத்தன் அடிச்சிட்டு போய்ட்டானு”.

ஆட்டத்தை ஆரம்பித்த கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்.. முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

அப்போ அந்த எவனோ ஒருத்தன போலீசும் தேடுது ஹீரோவும் தேடுறாரு அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் இந்த படத்தோட கதையே இந்த படத்துல வர ஹீரோ கேரக்டர் உண்மையிலேயே நிஜத்துல வாழ்ந்த ஒருத்தர் தான் அந்த கேரக்டர் பற்றி சமீபத்தில் டிவியில, பேப்பர்ல கூட பார்த்திருக்கலாம். திருச்சில உள்ள பிரபலமான நகை கடைல சுவத்துல ஓட்டைய போட்டு பெரிய தொகையை அடிச்சுட்டு போயிடுச்சு அந்த கேரக்டர்.

அந்த கேரக்டர் மேல சுமார் 110க்கும் அதிகமான வழக்குகள் இருக்கு அந்த கேரக்டர் இன்ஸ்பயர் பண்ணி தான் ஜப்பான் படம் பண்ணியிருக்காங்க. அதெல்லாம் கூட பிரச்சனை இல்ல ஆனா அத ராவா எடுத்து இருக்கணும் அல்லது கலர்புல்லான சினிமாவா எடுத்திருக்கணும் அப்படி இல்லாம ரெண்டு கேட்டான் படமா எடுத்து வச்சிருக்காங்க ஒரு நல்லவனோட கதையா இருந்தா அதை நாலு வரியில சொல்லிடலாம் அதுல எந்த சுவாரசியமும் இருக்காது.

ஆனா இந்த மாதிரி ஒரு பெரிய திருடனோட வாழ்க்கையை படமா எடுக்கும்போது நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கும் அவன் எப்படி திருடுனான், எப்படி பெரிய திருடன் ஆனான், அவன் எப்படி எல்லாம் தப்பிச்சாலும், போலீஸ் எப்படி எல்லாம் தேடினாங்க, திருடனோட குடும்ப வாழ்க்கை எப்படி இருந்துச்சு, எப்படியெல்லாம் என்ஜாய் பண்ணான் இப்படி எல்லாம் எடுத்து இருக்கலாம்.

அடுத்த அனுஷ்கா நீ தான்.. உடல் எடையை ஏத்தி ஆளே மாறிப்போன கேத்தரின் தெரசா -ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த புகைப்படம்

ஆனா இவங்க ஜப்பான் எப்பேர்பட்ட திருடன் தெரியுமா எப்படியான தில்லாலங்கடி தெரியுமான்னு டயலாக்ல தான் சொல்லிக்கிட்டு இருக்காங்களே தவிர ஹீரோ எப்படி புத்திசொல்லித்தனமா திருடுனாங்கன்னு காட்டல. அப்புறம் அவர் திருடுன காச வச்சுட்டு எப்படி எல்லாம் என்ஜாய் பண்ணாங்கன்னா சினிமா, எடுத்தார் உல்லாசமா இருந்தார் என்று மேம்போக்கா எடுத்திருக்காங்க அதே மாதிரி ஹீரோவை போலீஸ் தேடி வரதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா இருக்கு படத்துக்கு ரொம்ப சுவாரஸ்யமான கதைய செலக்ட் பண்ணிட்டு அதுல எதெல்லாம் சுவாரஸ்யமான விஷயம்னு தெரியாம மொக்கையான ஏரியாவ மட்டும் படமா எடுத்து வச்சிருக்காங்க.

மேலும் ஜப்பான் படத்துல திரைக்கதை, காமெடி, சாங், ஆக்சன் என எதுவுமே தரமா இல்லாம எடுத்து வச்சிருக்காங்க இந்த படத்துக்கு ஜப்பான் டைட்டில் வைக்காம சைனானு வெச்சி இருக்கலாம் என ப்ளூ சட்டை மாறன் இன்னும் ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.