அக்கம்பக்கம் பார்த்துப் பேசு.. லியோ திரைப்படம் வெளிநாட்டில் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய். இவர் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தளபதி 68 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த கூறுகிறார் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தளபதி 68 ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என பேச்சு பரவி வருகிறது. படத்தில் விஜய் உடன் இணைந்து அஜ்மல் அமீர், அரவிந்த், பிரேம்ஜி கங்கை அமரன், மீனாட்சி சவுத்ரி, டிடிவி கணேஷ், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கின்றனர் இது தவிர 90 ஸ் நடிகர், நடிகைகளான லைலா, சினேகா..

சாமர்த்தியமாக மொத்த பழியையும் தமிழ் மீது தூக்கிப் போட்ட அர்ஜுன்.! பத்ரகாளியாக மாறிய ராகினி.. தமிழும் சரஸ்வதியும்

மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்றவர்களும் படத்தில் நடித்து வருகின்றார்களாம் இந்த படம் பிரசாந்தை மையமாக வைத்து தான் கதை நகரும் என கூறப்படுகிறது வில்லன் கதாபாத்திரத்தில் மைக் மோகன் நடித்த வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் உலகம் எங்கும் நல்ல வசூலை அள்ளி மாஸ் காட்டி வருகிறது இதுவரை மட்டுமே சுமார் 570 கோடிக்கு மேல் வசூலில் உள்ளதாம்..

முத்துவை தனியாக அழைத்து மிரட்டும் மீனா.. தங்கமான மருமகன் என வாழ்த்தும் ஊர்க்காரர்கள்..

வெகு விரைவில் 600 கோடியை தொட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் லியோ திரைப்படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் வெளிநாடுகளில் மட்டும் 201 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.