தியேட்டரில் பேய் ஓட்டம் ஓடும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Jigarthanda DoubleX : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதலில் பீட்சா என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார். முதல் படமே அதிரி புதிரி ஹிட் அடித்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார் அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட படமும் ஹிட் அடித்தது இறைவி படம் சுமாராக ஓடியது. கடைசியாக விக்ரமை வைத்து மகான் என்னும் படத்தை எடுத்தார்.

ஆனால் இந்த படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. சிறு இடைவேளைக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  படத்தை எடுத்தார் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

பொன்னம்பலம் அடித்த அடியில் பத்தடி தாண்டி விழுந்த விஜயகாந்த்.. சுத்து போட்ட ரசிகர்கள் – அட இப்படியெல்லாம் நடந்திருக்கா

படத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன், சத்யன், அரவிந்த், சைன் டாம் சாக்கோ, பாவா செல்லதுரை, இளவரசு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படத்தின் கதை என்னவென்றால்.. ராகவா லாரன்ஸ் போட்டுத் தள்ள எஸ் ஜே சூர்யாவை களம் இறங்குகிறது அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல், காமெடிதான் படம்..

தரமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் வெற்றி நடை கண்டு வருகிறது இதுவரை மட்டுமே படம் சுமார் 52 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது என பேச்சுக்கள் வெளி வருகின்றன.

தோக்குறமோ.. ஜெயிக்கிறமோ.. முதல்ல சண்டை செய்யணும் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இதுவரை அள்ளி வசூல் எவ்வளவு தெரியுமா.?

இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த நடிகர். நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்து நாம் பார்த்து வருகிறோம் அதன்படி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி இந்த படத்திற்காக 7 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.