நட்புக்காக என்ன வேணாலும் செய்வேன்.. ரஜினி நடித்த “தளபதி” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

Rajini : உண்மை மற்றும் நாவல் கதைகளை படமாக எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் மணிரத்தினம். தமிழில் ஓ பிரியா பிரியா என்னும் படத்தை எடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்தார் அதன் பிறகு மௌன ராகம், நாயகன், சத்ரியன், இதயத்தை திருடாதே..

என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். இப்பொழுதும் இவர் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருடைய கேரியரில் இன்றும் பெரிய அளவில் பேசக்கூடிய படங்களில் ஒன்று தளபதி. படம் முழுக்க முழுக்க நட்பை பற்றி பேசும் படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி..

முடிவுக்கு வந்த லியோ படத்தின் வசூல்.. மொத்தம் இத்தனை கோடியா.?

அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக ஹிட் அடித்தது படத்தில் ரஜினி உடன் இணைந்து மம்முட்டி, அரவிந்த்சாமி, பானுப்பிரியா, ஷோபனா, ஸ்ரீதிவ்யா, நாகேஷ், ஜெய்சங்கர், ஷாருக்காசன் என பலர் நடித்திருந்தனர். படம் வெளிவந்து பல வருடங்கள் ஆனாலும் இன்றும்..

இந்த படத்தைப் பற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு படம் அற்புதமாக இருந்தது தான் காரணம்.  90களில் வெளிவந்த தளபதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தளபதி திரைப்படம் உலக அளவில் 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

எனக்கு நீ போட்டியா.? தொடையழகி ரம்பாவுக்கு தர்ம அடி கொடுத்த லைலா.. உண்மையை சொன்ன பிரபலம்

இந்தியாவில் மட்டும் 10.60 கோடி வசூல் செய்தது, வெளிநாட்டில் 2.50 கோடி வசூல் செய்ததாம்.. இன்றைய மதிப்பில் அது மிகப்பெரிய ஒரு தொகை என கூறப்படுகிறது இந்த தகவலை ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.