பருத்திவீரன் படத்தில் சித்தப்பு வந்தது எப்படி தெரியுமா.? இயக்குனரிடம் கெஞ்சிய சரவணன்

Paruthiveeran : அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன். படத்தில் கார்த்தி உடன் இணைந்து சரவணன், பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு,  சம்பத்ராஜ், சமுத்திரகனி,  சுஜிதா சிவக்குமார்  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படத்தின் கதை என்னவென்றால் பிரியாமணி கார்த்தியை உருகி உருகி காதலிப்பார் ஆனால் கார்த்தி ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்குவார். பின் காதலை புரிந்து கொண்ட கார்த்தி மனசுக்குள்ள நீ முழுசா வந்துட்ட இனி என்ன விட்டு நீ போக முடியாது என கூறுவார் அதன் பிறகு இருவரும் நன்றாக காதலித்து வரும்போது ஒரு கும்பல் பிரியாமணியை தூக்கிக் கொண்டு போய் ரேப் பண்ணி விடும்..

paiyaa 2 : கார்த்தியை ஓரங்கட்டிவிட்டு இளம் நடிகருக்கு வாய்ப்புகொடுக்கும் லிங்குசாமி.! யார் தெரியுமா.?

இது ஊருக்கு தெரிந்தால் நமக்கு அசிங்கம் என பிரியாமணி நீ என்ன கொன்னுடுடா என சொல்ல  கார்த்தியும் கத்தியால் வெட்டுவார் கடைசியில் ப்ரியாமணி  அப்பா ஆட்களுடன் வந்து கார்த்தியை வெட்டிக்கொள்வார் படம் விறுவிறுப்பாகவும் சூப்பராக அதே சமயம் எமோஷனலாக இருந்ததால் படம் பெரிய ஹிட் அடித்தது இந்த படத்தில் கார்த்தி பிரியாமணி கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு சரவணன் செவ்வாழை கதாபாத்திரத்தில் பின்னிபெடல் எடுத்திருப்பார்.

இந்த படத்தில் அவர் எப்படி நடிக்க வந்தார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பருத்திவீரன் படத்தில் செவ்வாழை கதாபாத்திரத்தில் பசுபதியை நடிக்க வைக்க அமீர் திட்டமிட்டு இருந்தார் அந்த சமயத்தில் சரவணன் நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டதற்கு இணங்க அவருக்கு அந்த சித்தப்பா கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லி-யின் மனைவி பிரபல சீரியல் நடிகையா.! சங்கீதா யார் தெரியுமா?

அதன்பிறகு படபிடிப்பு துவங்கும் போது முதலில் கார்த்தியின் சிறு வயது கதைகளை படமாக்கிக் கொண்டிருந்தார்கள் அதில் சரவணனுக்கு பெரிய காட்சிகள் இல்லாததால் மனம் நொந்து போன அமீரிடம் சொல்லி புலம்ப அமீர்  இது வெறும் ஃப்ளாஷ் பாக் காட்சி தான் நிகழ்கால கதை எடுக்கும் போது உங்களுக்கு அதிக காட்சிகள் இருக்கும் என கூறினார். அதன்படி படத்தில் இரண்டாவது கதாபாத்திரமாக சரவணன் கதாபாத்திரம் இருந்தது இந்த படம் வெற்றி பெற்ற பிறகு சரவணனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.