paiyaa 2 : கார்த்தியை ஓரங்கட்டிவிட்டு இளம் நடிகருக்கு வாய்ப்புகொடுக்கும் லிங்குசாமி.! யார் தெரியுமா.?

Paiyaa 2: கார்த்திக் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் இதில் கார்த்திக்கு பதிலாக இளம் ஹீரோ நடிக்க இருக்கிறாராம்.

அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி தனது மூன்றாவது படத்தில் இயக்குனர் லிங்குசாமியுடன் இணைந்தார். அதன்படி இவர்களுடைய கூட்டணியில் கடந்த 2010ஆம் ஆண்டு பையா திரைப்படம் வெளியானது இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து தமன்னா, ஜெகன், சோமன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

ரெடின் கிங்ஸ்லி-யின் மனைவி பிரபல சீரியல் நடிகையா.! சங்கீதா யார் தெரியுமா?

இதில் கார்த்திக்-தமன்னாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இவ்வாறு கார்த்தியின் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. தற்பொழுது லிங்குசாமி பையா படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க இருக்கிறாராம்.

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வேட்டை, அஞ்சான், சண்டைக்கோழி 2, தி வாரியார் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை எனவே இதனால் பையா 2 பாகமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இதில் கார்த்தி-தமன்னா ஜோடி சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கார்த்திக்கு பதிலாக இளம் ஹீரோ அறிமுகம் செய்ய இருக்கிறாராம் லிங்குசாமி. அதாவது பையா 2 படத்தில் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. முரளியின் முதல் பையன் அதர்வா ஹீரோவாக நடித்து வரும் நிலையில் பையா 2 திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக முரளியின் இளைய பையன் அறிமுகமாக உள்ளார்.

வாலி வேண்டாம்… அவன் பாட்டு போதும் என் ஆயுள் இருக்கும் வரை கேட்டுகிட்டு இருப்பேன் – தெறிக்க விட்ட விஜயகாந்த்

இவ்வாறு சமீப காலங்களாக தொடர்ந்து வெற்றினை பார்க்காமல் வரும் லிங்குசாமி பையா 2 படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தில் ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.