ரெடின் கிங்ஸ்லி-யின் மனைவி பிரபல சீரியல் நடிகையா.! சங்கீதா யார் தெரியுமா?

Redin Kingsley: இன்று பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸில்யின் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் திருமணம் செய்துக் கொண்ட பெண் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. சினிமாவிற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி பிறகு குரூப் டான்ஸராக சில படங்களில் நடனம் ஆடினார்.

இவர் நெல்சனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் எல்கேஜி, கூர்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் இந்த படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. எனவே மீண்டும் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

வாலி வேண்டாம்… அவன் பாட்டு போதும் என் ஆயுள் இருக்கும் வரை கேட்டுகிட்டு இருப்பேன் – தெறிக்க விட்ட விஜயகாந்த்

இதில் இவருடைய காமெடி லூட்டிகள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. எனவே இந்த படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இவ்வாறு காமெடி நடிகராக யோகி பாபுவிற்கு அடுத்ததாக ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் ரெடின் கிங்ஸ்லிக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மிகவும் தாமதமாக 46 வயதில் திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவருடைய மனைவியின் பெயர் சங்கீதா எனவும் இவர் பிரபல சீரியல் நடிகை என்பதும் தெரியவந்துள்ளது.

கதிரை சரமாரியாக வெட்டி சாய்க்கும் ரவுடி கும்பல்.! புருஷன் வெட்டுப்படுவதை பார்த்து பதறி அடித்து ஓடிவரும் நந்தினி.. பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமோ

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளாராம். மேலும் விஜய்யின் மாஸ்டர், சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், வீட்டில் விசேஷம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி பிசியாக இருந்து வரும் நிலையில் அதே போல் இவருடைய மனைவியும் சீரியல்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இருவருமே திரையுலகை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது இவ்வாறு இவர்களுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.