இந்த வருஷம் கொக்கி குமாரோட ஆட்டம் தான்.. செல்வராகவன் போட்ட பதிவால் தனுஷ் ரசிகர்கள் குஷி..

Pudhupettai 2 Update: இயக்குனர் செல்வராகவன் தனது தம்பியும் பிரபல நடிகருமான தனுஷை வைத்து 2006ஆம் ஆண்டு புதுப்பேட்டை என்ற சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்தார். இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

ஆனால் தற்பொழுது வரையிலும் இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருவதனால் செல்வாவை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர். இந்த சூழலில் தற்பொழுது செல்வராகவனின் பதிவு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளார். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான செல்வராகவன் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

காமெடி நடிகர் பாண்டுவை ஞாபகம் இருக்கிறதா.! அட அவரின் மகனும் ஒரு நடிகரா.?

இதனை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க இதனை தொடர்ந்து தனுஷை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அப்படி தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு நானே வருவேன் என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது.

பிறகு செல்வராகவன் இயக்குவதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள அவரது ஐம்பதாவது படத்திலும் செல்வராகவன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

முத்து மீனாவால் விஜயாவிடம் மாட்டிக் கொண்ட ரோகிணி..! உண்மையை சொல்லி விடுவேன் என பணம் கேட்டு மிரட்டும் நபர்..

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில் மேலும் இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்காகவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.