என்னால் உங்களை அடிக்க முடியாது.. நீங்க எவ்வளவு பெரிய இயக்குனர்.. விஜயகாந்த் அடிக்க மறுத்தது யாரை தெரியுமா..

Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களை கொடுத்து புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ப. வாசு இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அந்த வகையில் விஜயகாந்தை வைத்து பி வாசு இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சேதுபதி ஐபிஎஸ். சமீபத்தில் பி.வாசு விஜயகாந்த் உடன் நடித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி பி வாசுவை நடிகராக்கி அழகு பார்த்தவர் விஜயகாந்த் தானாம். விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் வல்லரசு.

வேட்டையன் படத்தில் ரஜினியின் கெட்டப் இது தான்.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

இந்த நேரத்தில் விஜயகாந்த் புகழ் பெற்ற வெற்றி நாயகனாக வளம் வந்து கொண்டிருந்தார் இருந்தாலும் வல்லரசு படத்தில் விஜயகாந்த் கேரக்டரில் இணையாக பி. வாசுவை நடிக்க வைத்துள்ளார். விஜயகாந்த் ஒரு சீனில் வாசுவை அடிக்கிற மாதிரி காட்சி ஆனால் கேப்டன் நான் அடிக்க மாட்டேன் என்று சொல்லி உள்ளார்.

பிறகு படத்திற்காக தானே அடியுங்கள் என்று வாசுவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் புகழ்பெற்ற இயக்குனரை நான் எப்படி அடிப்பது? என்று சொல்லி வேறு ஒரு நபரை வைத்து முகத்தை வேட்டியால் மறைத்து வாசுவை அடிக்கிற மாதிரி அந்த காட்சியில் நடித்தாராம் விஜயகாந்த். அந்த அளவிற்கு மிகவும் இயக்குனர் மீது மரியாதை கொண்டவராம்.

இவ்வளவு நடந்தும் மீண்டும் அவங்க அம்மா வீட்டுக்கு போன மகா.. சூர்யாவுக்கு வந்த புதிய சிக்கல் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

மேலும் குறிப்பாக விஜயகாந்த் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து 10 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். எனவே சினிமாவில் தனது குருவாக எஸ்.ஏ சந்திரசேகரை நினைத்துள்ளார் விஜயகாந்த். அப்படிதான் எஸ்.ஏ சந்திரசேகரன் கேட்டுக்கொண்டவுடன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் விஜய்யுடன் படத்தில் நடித்துள்ளார்.