‘துருவ நட்சத்திரம்’ படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்..

Dhruva Natchathiram review: விக்ரம் நடிப்பில் வருகின்ற 24-ஆம் தேதி துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தினை பார்த்து விட்டு இயக்குனர் கௌதம் மேனனை பிரபலம் ஒருவர் வாழ்த்தியுள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து சில பிரச்சனைகளினால் படப்பிடிப்பு தள்ளிப்போனது தற்பொழுது தான் முழு படம் நிறைவடைந்து வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பின் பொழுது மக்கள் மத்தியில் கேமரா மேனாக மாறிய அஜித்.! அன்ஸீன் வீடியோ..

இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படத்தினை பார்த்த பிரபலம் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் கௌதம் மேனன் உள்ளிட்ட படக் குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்க ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

எனவே கண்டிப்பாக கௌதம் மேனன் மற்றும் விக்ரமின் கூட்டணி மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களும் நடித்துள்ளார்கள். துருவ நட்சத்திரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தினை பார்த்த பிரபல இயக்குனர் லிங்குசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தை மும்பையில் பார்த்ததாகவும், படம் மிகவும் அருமையாக இருந்ததாகவும் படத்தின் காட்சிகளை பார்த்து தான் அசந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிவாஜியின் மகன் பிரபு -வின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

குறிப்பாக விக்ரமின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது, விநாயகன் இந்த படத்தில் அனைவரின் இதயத்தையும் திருடி விடுவார் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து நட்சத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர் கௌதம் மேனன் அவர்கள் இந்த படத்தினை ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து ஒரு சிறப்பான படமாக கொடுத்துள்ளார்.

படக்குழுவினர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு துருவ நட்சத்திரம் படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் லிங்குசாமி பதிவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் கூடுதல் ஆர்வமுடன் உள்ளனர்.