மீண்டும் ரஜினியை டார்கெட் செய்யும் தனுஷ்.! இந்த வேட்டையனா இல்ல அந்த ராயணா வா பார்த்துடலாம்..

Actor Dhanush: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் வேட்டையன் படத்திற்கு போட்டியாக தனுஷின் 50வது படமும் ஏப்ரலில் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தினை தா.சே ஞானவேல் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஆந்திரா கடப்பா பகுதியில் நடைபெற்றது. ரஜினி வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு லோகேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171வது படத்தில் நடிக்க வேண்டும் என்பதனால் விரைவில் படப்பிடிப்புகளை முடிக்க உள்ளனர்.

விசாரணைன்னு கூப்பிட்டு கொலை பண்றதுக்கு நான் ஒன்னும் உங்கள மாதிரி இல்ல… மிரட்டலாக வெளியானது சைரன் ட்ரைலர்

இந்நிலையில் வேட்டையனுக்கு போட்டியாக தனுஷின் 50வது படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் D50 படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அவரே இயக்கி வருகிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா, உஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

D50 படக்குழு இன்னும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அப்டேட்டையும் வெளியிடாமல் இருக்கும் நிலையில் ஆனால் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் நிறைவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் D50 படத்தின் டைட்டிலுடன் கூடிய தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல… அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால.. கட்டி பிடித்து ரோமன்ஸ் பண்ணும் புது பொண்ணு மாப்பிளை முத்து மீனா.!

இவ்வாறு தனுஷின் D50 வெளியாகும் ஏப்ரல் 11ஆம் தேதியன்று ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர் படம் வெளியானது அப்பொழுது வெளியாக இருந்த லால் சலாம் திரைப்படம் பிறகு பொங்கல் ரேசில் இருந்து விலகியது இந்த சூழலில் தற்பொழுது ரஜினி-தனுஷ் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.