கடைசி வரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை.. கைகூடும் நேரத்தில் மறைந்த சோகம்..

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் இந்த நிலையில் இவரின் உடல் இறுதி அஞ்சலிக்காக புரசிவாக்கத்தில் அவருடைய சொந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மாலை இவரின் உடல் தகாணம் செய்ய இருக்கிறார்கள்.

நடிகர் விவேக் முதல் விஜயகாந்த், சேஷுவரை குறுகிய காலகட்டத்திலேயே சினிமாவில் பல இழப்புகளை சந்தித்து விட்டோம் அந்த சோகம் மறைவதற்குள் டேனியல் பாலாஜியின் மரணம் சினிமா உலகினரை உலுக்கியுள்ளது. டேனியல் பாலாஜி நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் மீண்டும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது நடிகை  ராதிகா நடிப்பில் வெளியாகிய சித்தி தொடரின் மூலம் நடிப்பு உலகிற்குள் நுழைந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி.

ஒரு வழியாக சரவணனுக்கு தங்கமயில் கிட்டியது!! ஆனா பொண்ணுக்கு தான் பிடிக்கல.. அடுத்தது என்ன நடக்குமோ..

அந்தத் தொடரில் அவரின் பெயர் டேனியல் அதன் பிறகு இவருக்கு டேனியல் பாலாஜி என பெயர் உருவானது அதன் பிறகு ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு அடுத்த வருடமே காக்க காக்க திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் நடிக்க துவங்கினார்.

இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வில்லனாக உருவெடுத்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன் பிறகு பொல்லாதவன் திரைப்படத்தில் சுருள் தலை முடி வில்லனுக்கே உரிய ஸ்டைலில் வன்மம், ஆத்திரம், கொடூரமான பார்வை என்று டேனியல் பாலாஜி முழு வில்லனாகவே மாறினார்.

இறந்த பிறகும் கண்திறந்த டேனியல் பாலாஜி.? பலருக்கும் தெரியாத ரகசிய தகவல்..

டேனியல் பாலாஜியை இன்று வரை ரசிகர்கள் மறக்கவில்லை அதேபோல் பைரவா, வட சென்னை ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் திரையுலகில் வில்லனாகவும் நிஜ வாழ்க்கையில் ஆன்மீகவாதியாகவும் வாழ்ந்து வந்தார் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் 2019 ஆம் ஆண்டு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். இறந்த பிறகும் பிறருக்கு உதவும் மனப்பான்மை சிறந்தது என தன்னுடைய கண்களை தானம் செய்தார்.

டேனியல் பாலாஜி இறப்பு செய்தியை கேள்விப்பட்ட பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைதளத்திலும் நேரடியாகவும் செலுத்தி வருகிறார்கள் இயக்குனர் அமீர் வெற்றிமாறன் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் 48 வயது நிரம்பிய டேனியல் பாலாஜி சொந்தமாக படத்தை தயாரிக்க நிறைய கதைகள் எழுதி வைத்திருந்தார் ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை இந்த நிலையில் திரை பிரபலங்கள் இதனை கேள்விப்பட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.

படத்தை தயாரிப்பதையே தன்னுடைய கடைசி ஆசையாக வைத்திருந்த டேனியல் பாலாஜிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.