இறந்த பிறகும் கண்திறந்த டேனியல் பாலாஜி.? பலருக்கும் தெரியாத ரகசிய தகவல்..

Daniel Balaji passed away : பிரபல முன்னணி நடிகர் டேனியல் பாலாஜி என்று உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார். ஏராளமான தமிழ் திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர கேரக்டரிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் டேனியல் பாலாஜி. சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி நாடகத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி டேனியல் பாலாஜி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வர காக்க காக்க படத்தில் ஸ்ரீகாந்த், வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் சுகுமாரன் என இவர் நடித்த இரண்டு கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இந்த படங்களின் மூலம் வில்லனாக பிரபலமான டேனியல் பாலாஜி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேடையிலேயே ரோகினியை அசிங்கப்படுத்திய விஜயா..! மனோஜ விஜயாகிட்ட இருந்து பிரிக்கணும் பிளான் பண்ணும் ரோகினி.. குடும்பம் பிரியுமா..

இதன் மூலம் தனக்கான ரசிகர் பாட்டாளத்தை உருவாக்கிய இவர் கிட்டத்தட்ட 42 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 48 வயதாகும் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவ்வாறு இவருடைய இறப்பு திரையுலகினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தான் இல்லை என்றாலும் தனது உறுப்புகள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் மருத்துவர்களும் இவருடைய கண்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

ராகினி இது நீங்க தானா.. சீரியலில் மட்டும் தான் புடவையா.. தம்மாதுண்டு கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் தமிழும் சரஸ்வதியும் நடிகை..

தற்பொழுது அவருடைய உடலுக்கு கண்ணாடி அறையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் இன்று மாலை இவருடைய உடல் நல் அடக்கம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.