பிரம்மாண்டமாக நடைப்பெற்று முடிந்த ரெடின் கிங்ஸ்லி திருமணம்.! அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் மணப்பெண்..

Redin Kingsley Marriage: டாக்டர் திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அவருடைய திருமண புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இதற்கு முன்னதாக கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி, கூர்கா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சில படங்களில் நடித்து இருந்தாலும் டாக்டர் திரைப்படம் தான் ரெடி கிங்ஸ்லிக்கு திருப்பு முனையாக அமைய தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நெல்சனின் நெருங்கிய நெருங்கிய நண்பர் ஆவார்.

நீ ஒருத்தன் போதும் சூர்யாவை ஒழிக்க.. திரையுலகினரின் ஆதரவை கைப்பற்றிய அமீர்.!

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு  ரஜினியுடன் அண்ணாத்த, ஜெயிலர், விஜய்யுடன் பீஸ்ட் ,விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், சிம்புவுடன் பத்து தல, விஷால் உடன் மார்க் ஆண்டனி, விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கிவுள்ளார்.

Redin Kingsley Marriage
Redin Kingsley Marriage

இவ்வாறு தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவாதனால் இவருடைய திருமணம் தள்ளி போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று இவருக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மணக்கோலத்தில் தனது மனைவியுடன் இருக்கும் ரெட்டி கிங்ஸ்லியின் புகைப்படம் வருகிறது.

இடுப்பழகி, தொடையழகி எல்லாம் ஓரம்போங்க.. சில்க் ஸ்மிதா தான் பெஸ்ட்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்

மிகவும் தாமதமாக திருமணம் செய்துக் கொண்ட ரெடின் கிங்ஸ்லிக்கு தற்பொழுது 46 வயது என சொல்லப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சங்கீதா எனவும் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு இவரை திருமண கோலத்தில் பார்த்த பிரபலங்கள்,  ரசிகர்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Redin Kingsley Marriage
Redin Kingsley Marriage