2023-ல் திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கிய சினிமா பிரபலங்கள்.!

2023 Celebrities Marriage: 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சினிமா பிரபலங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஆண்டின் முடிவில் சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் பல சோதனைகளை சந்தித்து வந்துள்ளனர்.

தற்பொழுது மழை நின்று விட்டாலும் ஆனால் இதிலிருந்து இன்னும் மக்கள் வெளிவரவில்லை இது ஒரு புறம் இருக்க 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜெகத் தேசாய்-அமலா பால்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால் தலைவர் படத்தின் பொழுது இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிறந்தநாள். நீண்ட நாட்களாக சிங்கிளாக வாழ்ந்து வந்த அமலா பால் சமீபத்தில் தனது நெருங்கிய தோழரான ஜெகத் தேசாய் திருமணம் செய்து கொண்டார்.

2023-ல் கூகுளை ஆக்கிரமித்த இந்திய நடிகைகள்.. டாப் 10 லிஸ்ட் இதோ

கவின்-மோனிகா: சீரியல்களின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது  வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் டாடா படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளார். இதனை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை காதலித்து வந்த கவின் சமீபத்தில் மோனிகாவை திருமணம் செய்து கொண்டார்.

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்: சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியதுதான் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்த இருவீட்டார் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்தின் பொழுது கீர்த்தி பாண்டியன் நிறத்தை வைத்து பலரும் கேலி செய்தார்கள்.

ரோஹித் – கார்த்திகா: 80களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் கோ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பிஸ்னஸை  தொடர்ந்தார். சமீபத்தில் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 100 கிலோவுக்கு மேற்பட்ட தங்கத்தை அணிந்திருந்தார்.

என்னால முடியல விட்டுடுங்க ப்ளீஸ் இயக்குனரிடம் கெஞ்சிய நடிகை மீனா..! அந்த படம் பெரிய ஹிட்

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா: யோகி பாபுவிற்கு அடுத்ததாக தற்பொழுது சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் ரெடின் கிங்ஸ்லி நெல்சன் திலீப் குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார். இதன் மூலம் கோலமாவு கோகிலா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவருக்கு 46 வயதாகும். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களைத் தொடர்ந்து பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை திருமணம் செய்து கொண்டார். மேலும் நடிகர் அர்ஜுனனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உபாபதிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது விரைவில் இவர்களுடைய திருமணமும் நடைபெற உள்ளது.