இப்படியே போனா மார்க்கெட் அவ்வளவுதான்… பருத்திவீரன் கார்த்தி போல் தர லோக்கலாக இறங்கிய விக்ரம்.! வைரலாகும் வீடியோ

Chiyaan 62 Update: கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. மேலும் அதே போல் டாப் ஹீரோக்களின் பட அப்டேட்டுகளும் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். எனவே சோசியல் மீடியாவே அமர்க்களமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது சீயான் விக்ரம் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அப்படி தற்பொழுது துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பி இருந்தது.

இதனைத் தொடர்ந்து சியான் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் அப்டேட் நேற்று வெளியானது அதில் ட்ரைலர் வருகின்ற ஒன்றாம் தேதி வெளியாகும் என்றும் அடுத்த வருட ஜனவரி 26 உலகளவில் தங்கலான்  ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

கடல் கடந்து சாதனை படைத்த லியோ.! அமெரிக்காவில் ஆதிக்கம் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இதனைத் தொடர்ந்து சியான் 62 படம் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர். அதாவது தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெகு நேரம் கழித்து ஒரு வழியாக அந்த அப்டேட் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் சமீபத்தில் சித்தார்த் நடித்த சித்தா படத்தையும் இயக்கியிருந்தார். இவர்தான் சீயான் 62 படத்தையும் இயக்க இருக்கும் நிலையில் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ரியா சுப்பு தயாரிக்க இருப்பதாகவும் அந்த வீடியோவில் அப்டேட் வெளியாகி உள்ளது.

அண்ணாமலையை பார்க்க விடாமல் மீனாவை துரத்தி விடும் விஜயா, மனோஜ்..! கண்டுகொள்ளாமல் நிற்கும் முத்து – சிறக்கடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

மேலும் வீடியோவின் ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பெண் குழந்தையுடன் இரண்டு நண்பர்கள் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க வருகின்றனர். அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்களை விக்ரம் அடிக்கும் மிரட்டலான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இப்படி போலீஸ் ஸ்டேஷனை ரணகல படுத்திய சீயான் வேஷ்டி, சட்டை என சாதாரண மனிதராகவும் காணப்படுகிறார்.