பல கோடி செலவு செய்து ஜெட் விமானம் வைத்திருக்கும் பிரபலங்கள்.. நயன்தாராவிற்கு முன்பே இத்தனை பிரபலங்களா.?

Cinema News: சினிமாவைப் பொருத்தவரை தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் பிரபலங்களுக்கு பல கோடி சம்பளம் தரப்படுகிறது. எந்த பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறதோ அந்த பிரபலங்களுக்கு ஒவ்வொரு படத்திற்கும் பல கோடி அதிகமாக சம்பளங்களை தயாரிப்பாளர்கள் கொடுத்து வருகின்றனர்.

அப்படி ஏராளமான பிரபலங்கள் சொகுசு பங்களா, சொகுசு கார் போன்றவற்றை வைத்துள்ளனர் அதிலும் ஒரு சில பிரபலங்கள் மட்டும்தான் சொந்தமாக விமானங்களையும் வைத்திருக்கிறார்கள். அதில் ஏராளமான தமிழ் பிரபலங்களும் விமானம் வைத்திருக்கும் நிலையில் அவர்கள் குறித்து பார்க்கலாம்.

சத்யராஜ்ஜால் நடுத்தெருவுக்கு வந்த முன்னணி நடிகையின் நிலைமை இதுதான்.. அடகொடுமையே இவருக்கா இந்த நிலைமை..

அப்படி தற்பொழுது தென் இந்திய சினிமாவில் நடிகைகள் அளவிற்கு அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும்தான். பணக்கார நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பல பிசினஸ்கள் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் பல கோடி வருமானத்தை பார்த்து வரும் நயன்தாரா சொந்தமாக விமானம் வைத்துள்ளார்.

நடிகைகளில் இவர் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்து வரும் நயன்தாரா பல கோடி சம்பளம் வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.  இவர்களை தொடர்ந்து ரஜினிகாந்த், பிரபாஸ், அல்லு அர்ஜுன், நாகர்ஜுனா, ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, ராம்சரண் போன்ற பிரபலங்களும் சொந்தமாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஜெட் விமானத்தை வைத்துள்ளனர்.

மகனுக்கு போட்டியாக சிக்ஸ் பேக் வைத்து அசத்திய விஷாலின் அப்பா.. 82 வயதில் முறுக்கேற்றும் உடம்பை பார்த்தீர்களா

இவ்வாறு இந்த பிரபலங்கள் அனைவருமே அதிகமாக சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்த பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய சொந்தமான ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.