மகனுக்கு போட்டியாக சிக்ஸ் பேக் வைத்து அசத்திய விஷாலின் அப்பா.. 82 வயதில் முறுக்கேற்றும் உடம்பை பார்த்தீர்களா

Vishal : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் விஷால் “செல்லமே” படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து விஷால் நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன்..

வெடி என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அஜித், விஜய் லெவலுக்கு பேசப்பட்டார்.  2015 ஆம் ஆண்டு நடிகர் சங்க செயலாளராக பதவி ஏறினார் அதன் பிறகு விஷால் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கவில்லை என்றே கூறலாம் துப்பறிவாளன், இரும்புத்திரை படத்தை தவிர மற்ற படங்கள் அனைத்துமே சுமாராக ஓடியது.

திருமணம் வரை சென்று நின்ற நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படம்..

அதிலும் கடைசியாக இவர் நடித்த லத்தி, வீரமே வாகை சூடும் எனிமி போன்ற படங்கள் சரிவை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வர ஆதிரவி சந்திரனுடன் கைகோர்த்து எஸ் ஜே சூர்யா, விஷால் நடித்த மார்க் ஆண்டனி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடி 100 கோடி மேல் வசூல் செய்தது.

விஷால் கேரியரில் முதல் 100 கோடியை தொட்ட படமாகவும் பார்க்கப்படுகிறது. தற்பொழுது கைவசம் ரத்தனம், துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் இருக்கின்றன குறிப்பாக துப்பறிவாளன் 2 படத்தை இவரே இயக்கி, நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் எப்படி இந்த வயதிலேயே உடம்பை ஃபிட்டாக வைத்து வருகிறாரோ..

குணத்தில் தங்கம், நடையில் சிங்கம்.. வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் – ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

அதேபோல அவரது தந்தையும் 82 வயதில் உடம்பை முறுக்கேற்றி வைத்திருக்கிறார். விஷாலுக்கே டஃப் கொடுக்கும் அவரது தந்தை ஜிகே ரெட்டி இவர் ஒரு வளமான தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ விஷாலின் தந்தை ஜிகே ரெட்டியின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

reddy
reddy
reddy
reddy