திருமணம் வரை சென்று நின்ற நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்த புகைப்படம்..

Actress Trisha: சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டு பாதியிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து காதலால் பல பிரச்சனைகளை சந்தித்த திரிஷா தற்பொழுது பிரிவதற்கு எதற்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

நடிகை திரிஷா 1999ஆம் ஆண்டு வெளியான ஜோடி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக சாமி படத்தில் நடித்திருந்தார் சாமி படம் பட்டித்தொட்டி எங்கும் வைரலாக திர்ஷாவிற்கு பல வாய்ப்புகள் குவிந்தது.

குணத்தில் தங்கம், நடையில் சிங்கம்.. வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் – ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த திரிஷா பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வரும் இவர் இடையில் சினிமாவில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் சேதுபதி உடன் இணைந்து 96 என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றினை பெற்றது.

actress trisha
actress trisha

இவ்வாறு இதனை அடுத்து பொன்னியின் செல்வன், லியோ போன்ற வெற்றியை திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சினிமாவிற்கு அறிமுகமாகி 20 வருடங்களை கடந்திருந்தாலும் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.

சங்கரையே மிஞ்சிய வெங்கட் பிரபு.. இந்த காட்சிக்கு இத்தனை கோடியா?

இந்நிலையில் திரிஷாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்திற்கு முன்பாக நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த சூழலில் திடீரென்று கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயதார்த்தத்துடன் முடிந்துவிட்டது.

actress trisha
actress trisha

இந்த நிச்சயதார்த்தத்திற்கு பிறகு திரிஷா பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது ஆனால் அந்தக் காதலும் ஒன்று சேராத காரணத்தினால் தற்போது வரையிலும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் திரிஷா. இதற்கு மேல் திருமணம் வேண்டாம் என்றும் சிங்கிளாகவே வாழ்ந்து விடலாம் எனவும் முடிவு செய்திருக்கும் நிலையில் இவருடைய பழைய நிச்சயதார்த்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

actress trisha
actress trisha