எனக்குன்னு நீங்க ஒரு இடம் கொடுப்பீங்கில்ல அது போதும்.. கண்ணீரை வரவழைக்கும் விஜயகாந்தின் பழைய வீடியோ..

Captain Vijayakanth Speech: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது தொண்டர்கள் முன்னிலையில் உருக்கமாக பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

71 வயதை தொட்ட விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஒரு கட்டத்தில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானது மருத்துவர்களும் கடின முயற்சி செய்து வந்த நிலையில் ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் காலமானார்.

இந்த விளம்பரத்தில் நடிக்க ஒரு கோடி கொடுத்தும் மயங்காத விஜயகாந்த்.. மக்கள் நலனுக்காக நிஜ வாழ்க்கையிலும் கருப்பு எம்ஜிஆர் தான்.

சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது இதன் காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டார். இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணபாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட நுரையீரல் நிபுணர்கள் அவரை கவனித்து வந்தனர் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டிசம்பர் 28ஆம் தேதி இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் விஜயகாந்தின் மறைவு தமிழக முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இவருடைய உடல் வலசரம்பாக்கத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரை பிரபலங்கள், தொண்டர்கள் அனைவரும் கதறி அழும் வீடியோக்களை பார்த்தோம்.

தனது அப்பாவிடம் சபதம் போட்ட விஜயகாந்த்.. உதவுவதற்கு பின்னால் இப்படி ஒரு கதை உள்ளதா.!

இதனை அடுத்து விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, அந்த வீடியோவில் விஜயகாந்த் எனக்குன்னு ஒரு இடம் கொடுப்பீங்கல.. அது இருக்கும்ல.. என் மனைவிக்கு ஒரு இடம் இருக்கும் என்று உங்கள் சட்டத்தில் இடம் இருக்கும்ல.. என் பிள்ளைக்கு ஒரு இடம் இருக்கும்ல.. அது போதும் இங்க இவ்வளவு பேரு இருக்காங்க நாலு பேரு வந்து ஒரு நேரம் சோறு போட மாட்டீங்களா.

அதுலயே முடிஞ்சிடும் இத்தனை பேர் வீட்டுக்கு போய் வந்தால் முடிந்துவிடும்.. என்னய்யா காசு காசு அட போங்கய்யா நீங்களும் உங்கள் காசம்.. கோடி கோடியாய் சேர்த்து வைத்து எங்கையா கொண்டுட்டு போக போறீங்க செத்தால் கூட அரஞ்சான் கொடிய அறுத்துட்டுதான் உள்ளே புதைக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்