அரண்மனை போல் கட்டப்படும் விஜயகாந்தின் கனவு இல்லம்.! வைரலாகும் புகைப்படம்

Captain Vijayakanth: நடிகர் விஜயகாந்த் கட்டிய பிரம்மாண்டமான வீடு குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர். அப்படி இவர் அரண்மனை போல பிரம்மாண்டமாக கனவு இல்லம் ஒன்றை கட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது சென்னை பேரூரில் இருந்து பூந்தமல்லி போகும் நெடுஞ்சாலையில் உள்ள காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் விஜயகாந்த் 2013ல் இருந்து இப்பொழுது வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வீட்டை கட்டி வருகிறார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இதுவரையிலும் 50% வேலைகள் மட்டுமே முடிந்துள்ளது.

மேகனாவை போட்டுத்தள்ள சுத்து போட்ட கலிவரதன் அர்ஜுன்.. தப்பித்து சரஸ்வதி இடம் கெஞ்சும் மேகனா.! காப்பாற்றுவாரா தமிழ்.?

காட்டுப்பாக்கம் ஆட்கோ நகர் இரண்டாவது பிரதான சாலையில் கட்டப்பட்ட வரும் இந்த வீடு அரண்மனை போல மிகவும் பிரமாண்டமாக உள்ளது. வீட்டின் முகப்பு ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இரண்டு மாடி கொண்ட இந்த வீடு பார்ப்பதற்கு ஐந்து அடுக்கு வீடு போல் தெரிகிறது.

captain vijayakanth 1
captain vijayakanth 1

மேலும் 20 ஆயிரம் சதுர அடி அளவுக்கு இருக்கும் இந்த வீட்டின் கட்டுமான பணிகள் தற்பொழுது வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரத்திற்கு முன்புதான் மின் இணைப்பு இந்த வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது இன்னும் முழுமையாக வீட்டில் வேலைகள் முடிய குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என கூறுகின்றனர்.

captain vijayakanth
captain vijayakanth

விஜயகாந்த் எத்தனை ஆண்டுகளாக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு மிகவும் எளிமையானது அரசியல் தலைவரின் வீடு போலவே தெரியாது இவரது இறுதிச் சடங்கு அங்கேதான் நடைபெற்றது. அப்பொழுது அந்த வீட்டிற்குள் 50 பேர் செல்வதற்கு மிகவும் நெருக்கடியாக இருந்தது வீட்டிற்குள் 10 பேர் தான் சென்றனர்.

ஜமீன்தாராக நடித்துள்ள மாரிமுத்து.! தூக்குதுரை விமர்சனம் இதோ.!

அந்த அளவுக்கு மிகவும் எளிமையான வீடு. விஜயகாந்த் அரசியல் வாழ்க்கைக்கு பிறகு இந்த வீடு தனக்கு போதும் என கூறியுள்ளார் பிறகு பிரேமலதா தான் ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும் என விஜயகாந்த்திற்கு புரிய வைத்துள்ளார். அதன் பிறகு இந்த வீட்டின் வேலைகள் தொடங்கியுள்ளது. வீடு கட்ட ஆரம்பித்ததற்கு பிறகு விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போனதால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக வீட்டின் வேலைகள் நடைபெற்று வருகிறது.