கல்லூரி தோழர்களுடன் விஜயகாந்த் மிரட்டிய ஒரே படம்.. திரையில் 200 நாட்கள் கடந்து சம்பவம் செய்த கேப்டன்.!

vijayakanth 200 days movies
vijayakanth 200 days movies

Captain Vijayakanth Best Movie: கேப்டன் விஜயகாந்த் ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர் மேலும் பத்து படங்கள் வரையிலும் சுமாராக ஒரு வருடத்திற்கு நடித்து வந்துள்ளார். அப்படி பேட்டி ஒன்றில் கூட ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்துள்ளீர்களே எப்படி என்று கேட்க அதற்கு விஜயகாந்த் உட்காராமல் நடித்துக் கொண்டே இருந்தேன்.

தூங்குவது எல்லாம் விமானத்தில் தான் என கூறியிருந்தார். இவ்வாறு இவருடைய கடின உழைப்பினால் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் 50க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதும் கேப்டன் விஜயகாந்த் தான். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தன்னை போல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சினிமாவில் பணியாற்ற விரும்பும் பலருக்கும் உதவி செய்தார்.

மனைவியை பக்கத்தில் வச்சுக்கிட்டு நடிகைக்கு அம்பு விட்ட 5 ஹீரோக்கள்.. அலறவிட்ட மிஷ்கின்

சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூற வேண்டும் அந்த கருத்துக்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி பல திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார்.

இவ்வாறு விஜயகாந்த் கல்லூரி மாணவர்களை வைத்து ஊமை விழிகள் என்ற சரித்திர படத்தை எடுத்து சாதனை படைத்தார். யாருமே கல்லூரி மாணவர்களை நம்பி திரைப்படம் எடுக்காத நிலையில் அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்திருந்த விஜயகாந்த் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தார். இவ்வாறு ஊமை விழிகள் படத்தை அரவிந்த் ராஜ் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊமை விழிகள் படம் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒருவன் அடுத்தடுத்து அழகான பெண்களை வேட்டையாடும் திரில்லர் கதை அம்சத்துடன் உருவானது. அன்றைய காலகட்டத்தில் புதிய அனுபவங்களை இப்படம் கொடுக்க ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இப்படத்தில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களான அருண் பாண்டியன், சந்திரசேகர், ராம்கி, ஆபாவாணன் உள்ளிட்டருடன் இணைந்து நடித்து ஹிட் கொடுத்தார்.

முதல் 200 கோடி வசூல் செய்த 5 தமிழ் நடிகர்களின் திரைபடங்கள்..!

தனது நண்பர்கள் என்பதால் மிகவும் ஜாலியாக ஊமை விழிகள் படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஊமை விழிகள் படம் 200 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. கேப்டனின் மறைவிற்குப் பிறகு ஊமை விழிகள் 2 படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் AI தொழில் நுட்பத்தின் மூலம் விஜயகாந்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து நடிக்க வைக்க வேண்டும் என ஆபாவாணன் தெரிவித்துள்ளார்.