நான் கலாய்க்க ஆரம்பிச்சா மூணு நாள் உக்காந்து அழுவ செஞ்சிருவேன்.. அர்ச்சனாவை வேண்டுமென்றே வம்பு இழுக்கும் நிக்சன் -வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo 2 December 07 : விஜய்டிவி பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வருகின்றன.. அதில் பலருக்கும் பிடித்த முக்கிய ஷோ என்றால் பிக்பாஸ் தான்.. இதில் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத பல்வேறு போட்டியாளர்களை இறக்கி 100 நாள் நடத்த ப்படுகிறது.

சகப் போட்டியாளர்களுடன் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் சக போட்டியாளர்களுக்கிடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு பூகம்பம் வெடிக்கும் அந்த வகையில் நேற்றைய பிக்பாஸ் 7 எபிசோடில் பிக் பாஸ் வீடு கலை கல்லூரி ஆக மாறி இருந்தது.. அதில் சில போட்டியாளர்கள் மாணவராகவும் சிலர் ஆசிரியர்களாகவும் இருந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சைலண்டாக உதவி செய்த அஜித்.. வாழ்த்தும் ரசிகர்கள்

அப்பொழுது ஸ்டெல்லா மேம் கதாபாத்திரத்தில் இருந்த அர்ச்சனா பாடம் நடத்தும் பொழுது பிக் பாஸ் வீட்டில் கேங்காக சேர்ந்து செயல்படுகின்றது பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார் பிறகு பீட்டி ஆசிரியராக பாடம் எடுக்க வந்த நிக்சன் இந்த பிக்பாஸ் வீட்ல ஆரம்பத்தில் சந்தோஷமா தான் இருந்தோம் ஐந்து வைல்டு கார்டு என்னைக்கு வந்தாங்களோ..

அப்புறம் தான் எல்லாமே மாறுச்சு என்று அர்ச்சனாவை பற்றியும் பேசி இருந்தார் இந்நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ 1 – ல் நிக்சன் அர்ச்சனாவை நீ இந்த கேமுக்கு அன்பிட் என்று சொல்ல ஏற்கனவே ஒரு பொண்ண பத்தி இப்படித்தான் தப்பா பேசின, என்று சொல்ல வினுஷா மேட்டர் பத்தி திரும்ப பேசாதே என்று நிக்சன் அர்ச்சனாவிடம் சத்தம் போடுகிறார்.

ரஜினியின் கோபத்தால் விஜயகாந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இதுக்கு பேரு தான் தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்கிறதா.?

இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனாவை பார்த்து நிக்சன் பொண்ணா இது சும்மா உக்காந்து சாப்பிட்டு இருக்குறது இல்லமா அடுத்தவங்க வேலையில வந்து தட்டுறது.. சும்மா வினுஷா வினுஷா என்று சொல்லிக்கிட்டே இருக்கதா.. நான்லாம் கலாய்க்க ஆரம்பிச்சா மூணு நாள் உட்கார்ந்து அழுவ செஞ்சிருவேன் இன்று ரொம்ப கோபமாக சத்தம் போடுகிறார்.