விஷ்ணுவுக்கு ஃபர்ஸ்ட் டார்கெட் நான் தான்.. மாயா இந்த கேம் விளையாட மாட்டேன் – பிக்பாஸ் ப்ரோமோ

BiggBoss 7 Promo : உலகநாயகன் கமலஹாசன் சினிமா அரசியல் என பல்வேறு துறையிலும் பிசியாக இருந்தாலும் சின்னத்திரையில் வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்த நிகழ்ச்சியை கமல் அளவுக்கு பக்குவமாக தொகுத்து வழங்க யாராலயும் முடியாது.

அந்த அளவிற்கு கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாகவும் தோல் தட்டி கொடுக்கும் இடத்தில் நண்பனாகவும் போட்டியாளர்கள் இடையே மிகவும் பண்பாகவும் பேசக்கூடியவர். கமலஹாசனுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பலரும் கண்டு களித்து வருகின்றனர்.. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு சூப்பராக ஒளிபரப்பாகி வருகின்றன.

சித்ராதேவியிடம் கையும் களவுமாக மாட்டிய ஐஸ்வர்யா.. காப்பாத்தி விட்ட மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இதில் அண்மையில் பிக் பாஸ் வீடு கலைக்கல்லூரியாக மாறி சில பேர் பேராசிரியராகவும் சிலர் மாணவர்களாகவும் என்டர்டைன்மெண்ட் செய்தனர். அப்பொழுது அர்ச்சனா மட்டும் நிக்ஷனுக்கு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இன்றைய எபிசோடில் ஜாக்பாட் டாஸ்க் நடைபெற இருக்கின்றன அதில் ஐந்து கோல்ட் ஸ்டார் கிடைக்க இருக்கின்றன.. போட்டியாளர்கள் அனைவரும் அந்த கோல்டு ஸ்டார் தங்களுக்கு வேணும் என்பதற்காகவும் போராடலாம் மற்றவர்களுக்கு அந்த ஸ்டார் போகக்கூடாது என்பதற்காகவும் போராடலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

வாய்ப்பு தராங்கனு வழிஞ்சுகிட்டு சிரிச்சுகிட்டு நின்னா இதுதான் நிலைமை – அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய சங்கீதா

பிறகு மாயா பூர்ணிமாவிடம் நான் இந்த கேம் விளையாட மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு பூர்ணிமா எனக்கு இப்ப நடுங்குது என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியல விஷ்ணுக்கு ஃபர்ஸ்ட் டார்கெட் நானாதான் இருப்பேன் என்று அழுது கொண்டே செல்லும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன..