ஐயோ டைட்டில் போச்சே.. பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் சூனியக்காரி மாயா போட்ட பதிவு..

bigg boss 7 : விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் வெற்றிகரமாக பிக் பாஸ் ஏழாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது இந்த பிக் பாஸ் ஏழாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் இந்த நிலையில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் கடைசியாக இறுதி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஏற்கனவே விசித்ரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றார் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் வயதான போட்டியாளர் கடைசிவரை வருவது மிகவும் கடினம் ஆனால் விசித்திரா மிகவும் நன்றாக விளையாடி இறுதி வரை கொண்டுவரப்பட்டார் ஆனால் திடீரென அவர் வெளியேற்றப்பட்டார்.

நடிகர் கரண் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வர இதுதான் காரணமாம்.? உதவிய நடிகர்கள்

அவரை தொடர்ந்து விஜய் வர்மா அவர்களும் வெளியே சென்றார் இந்த நிலையில் பிக் பாஸ் ஷோ வில் பைனல் லிஸ்ட் ஆக அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், விஷ்ணு என 5 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வார் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது ஆனால் ரசிகர்கள் பலரும் அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் பட்டம் தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் கமலும் அவருக்கு தான் ஆரம்பத்தில் இருந்து ஆதரவு கொடுத்து வந்தார் இந்த நிலையில் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் ஆகியுள்ளார் மாயா மூன்றாவது இடத்தை தான் பிடித்தார் இந்த நிலையில் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கோர்ட்டில் காலில் விழாத குறையாக கண்ணீருடன் கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் செழியன்.! ஜெனி எடுக்கபோகும் அதிரடி முடிவு..

அதாவது அவர் கூறியதாவது கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல என அவர் பதிவிட்டுள்ளார் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது என்ன கொண்டு வந்தோம் ஆனால் போகும்பொழுது கொண்டு செல்ல என்பது போல் கூறியுள்ளார் இது ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.