நான் ஏழை ஆடம்பரமாக வாழ வேண்டும் என மோதிக் கொள்ளும் பிரதீப்-ஜோவிகா! பத்திக்கிட்டு எரியும் பிக் பாஸ் வீடு

Bigg Boss season 7 promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ரேங்கிங் டாஸ்க் நடைபெற்று வருவதனால் பிரதீப் – ஜோவிகாவும் சண்டை போட்டுக் கொள்ளும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்கில் கடுமையாக விளையாடி வருகின்றார்கள்.

அப்படி இன்று ரேங்கிங் டாஸ்க் நடைபெறுகிறது முதல் சீசனில் இருந்து கடந்த 6 சீசன்கள் வரையிலும் இந்த டாஸ்க் நடைபெற்று அதேபோல் தற்போது 7வது சீசனிலும் நடைபெற்று உள்ளது. அப்படி இந்த சீசனிலும் 1 முதல் 15 வரை ரேங்க் வைக்கப்பட்டு தங்களுக்கான இடத்தினை பேசி பிடிக்க வேண்டும்.

Biggboss : 6 கிளாமர் நடிகைகளை இறக்கி விட்டு ரசிகர்களை உசுப்பேத்திய விஜய் டிவி.

முதலில் வேகமாக சென்று தங்களுக்கான இடங்களை போட்டியாளர்கள் பிடித்துக் கொள்ளலாம் அதன் பிறகு தனக்கு இந்த இடம்தான் வேண்டும் என்றால் அந்த நம்பரில் நிற்பவரிடம் வாதாடி கேட்டு பெற வேண்டும். அப்படி இந்த டாஸ்க் ஆரம்பித்த உடனே வேகமாக சென்று பிரதீப் ஆண்டனி முதல் இடத்தில் இருக்கிறார்.

இரண்டாவது இடத்தில் ஜோவிகா நின்று கொண்டிருக்கிறார் இதில் ஜோவிகா முதலிடத்திற்கு நான் தான் தகுதி என கூறியதனால் அவர் பிரதீப்புடன் வாக்குவாதம் செய்கிறார். ஒரு கட்டத்தில் முதலிடத்தில் நிற்கும் பிரதீப் விட்டுக் கொடுக்க முடியாது என கூறியதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றுகிறது.

Ajith : ஒரே ஒரு சீனை கேட்டு படத்தில் நடிக்க ஓகே சொன்ன அஜித்.! இந்த தில்லு வேற எந்த ஹீரோவுக்கும் வராது

எனவே இதனால் தங்களுடைய வாழ்க்கை நிலை குறித்து பேச ஆரம்பிக்கிறார்கள் அப்பொழுது பிரதீப் தான் ஏழை என்பதாலும் தனக்கு உன்னை போல் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியவில்லை என்பதனாலும் அதனை அடைய எனக்கு இந்த டைட்டில் முக்கியம் அதனால் எனக்கு முதலிடம் வேண்டும் என கூறுகிறார். அதற்கு ஜோவிகா நானும் மிடில் கிளாஸ் பொண்ணுதான் என கூறியதை கேட்டு கடுப்பான பிரதீப் இப்படி சொல்லி மக்களை ஏமாத்தாத என சொன்னதும் ஜோவிகா கடுப்பாகி கத்த இருவருக்கும் இடையே மோதல் அதிகமாகிறது இவ்வாறு அனல் பறக்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.