Ajith : ஒரே ஒரு சீனை கேட்டு படத்தில் நடிக்க ஓகே சொன்ன அஜித்.! இந்த தில்லு வேற எந்த ஹீரோவுக்கும் வராது

Ajith : தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வருபவர் அஜித். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி உடன் கூட்டணி அமைத்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

மேலும் அர்ஜுன், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் போன்றவர்களும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படம் குறித்து ஒரு செய்தியை வெளியாகி உள்ளது. சமீபத்திய பேட்டியில் விஜே அஞ்சனா ஹச். வினோத்திடம் துணிவு படத்தின் கதையை அஜித் சாரிடம் சொல்லும் போது அவருடைய ரியாக்ஷன் எப்படி இருந்தது இந்த கதையை எப்படி ஓகே செய்தார் என்று கேட்க..

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியருபவர் இவர்தான்.. ட்ராமா குயினுக்கு வைத்த ஆப்பு

ஹச். வினோத் இந்த படம் கதை ரெடி பண்ணி தயாராகவில்லை.. கொரோனா நேரத்தில லாக் டவுன் இருந்தது அதெல்லாம் முடிந்த பிறகு அஜித் சார் தான் ஃபர்ஸ்ட் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணினார்.. அப்பொழுதெல்லாம் நாங்கள் பயத்தில் மாஸ்க் போட்டு இருப்போம் ஆனால் அஜித் சார் மட்டும் மாஸ்க் போட்டு இருக்க மாட்டார்.

ஏன் என்று கேட்டால் எப்படியும் சூட்டிங் நேரத்தில் மாஸ்க் இல்லாமல் தான் சூட் பண்ண போறீங்க.. அதனால நான் மாஸ்க் இல்லாமலே இருந்துகுறேன் என்று சொன்னார். இதுபோன்று பேசிக் கொண்டிருக்கும் போது லாக்டவுன் டைமில் என்ன பண்ணுணீங்க என்று என்னை கேட்டார்.. அப்பொழுது இரண்டு ஸ்கிரிப்ட் எழுதி வச்சிருக்கேன் சார் என்று அதில் ஒன்றை அவரிடம் சொன்னேன் உடனே அவர் போனி சாரிடம் போய் பேசிவிட்டு..

Leo OTT release : லியோ OTT ல் எப்பொழுது தெரியுமா.?

கொஞ்ச நேரம் கழித்து திரும்ப வந்து இந்த ப்ராஜெக்ட் நம்ம பண்ணலாம் என்று சொன்னார் அதற்கு நான் இன்னும் ஸ்கிரிப்ட் முழுசாவே சொல்லவில்லையே சார் என்று கேட்க இல்ல நீங்க சொன்ன கதையை வைத்து இந்த படம் எப்படி வரும்னு எனக்கு தெரியும் என்று அஜித் சொன்னதாக சொல்லி உள்ளார்.. பிறகு இந்த கதையை கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தி  துணிவு படம் உருவாகியது என்று கூறியிருக்கிறார்..