இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவர்தான்.. ட்ராமா குயினுக்கு வைத்த ஆப்பு

Bigg Boss season 7 Voting List: மற்ற சீசன்களை விட 7வது சீசன் பல மாற்றங்களுடன் தொடரப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது மேலும் மக்களுக்கு பரிச்சயமான சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு இருப்பதனால் சீக்கிரமாகவே மக்கள் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கியது. அப்படி வாரம் தோறும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

ஏனென்றால் வாரத்தின் தொடக்கத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் ஓட்டுக்கலுக்காக அனுப்பப்படுகின்றனர். இவர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெரும் போட்டியாளர்கள் அந்த வாரத்தின் இறுதியில் வெளியேறி வருகிறார்கள். எனவே தொடர்ந்து வாரம் தோறும் சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்படி இந்த வாரம் நாமினேஷனில் 11 போட்டியாளர்கள் சிக்கி உள்ளார்கள் இதில் அதிக வாக்குகளை பெற்று பிரதீப் டாப் லிஸ்டில் இருக்கிறார். இவரை தொடர்ந்து நிக்சன், மணிகண்டன், விஷ்ணு, ஜோவிகா, அக்ஷயா, மாயா போன்ற போட்டியாளர்களும் அடுத்தடுத்த இடத்தினை பிடித்திருக்கிறார்கள். கடைசி நான்கு இடத்தில் கூல் சுரேஷ், யுகேந்திரன், விக்ரம், வினுஷா ஆகியோர்கள் உள்ளனர்.

Bigg Boss season 7 Voting List
Bigg Boss season 7 Voting List

எனவே கண்டிப்பாக இந்த வாரம் சீரியல் நாயகி வினுஷா வெளியேறப் போகிறார். இவர் தான் பிக் பாஸில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார் அதோடு மட்டுமல்லாமல் பெரிதாக சுவாரசியம் இல்லாத போட்டியாளராகவும் இருந்து வருவதனால் இவர் வெளியேறினால் நன்றாக இருக்கும் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bigg Boss season 7 Voting List
Bigg Boss season 7 Voting List

அதோடு மட்டுமல்லாமல் நான் அப்படித்தான் என்னால் கொஞ்சம் கொஞ்சமாக தான் விளையாட முடியும் என வசனம் எல்லாம் பேசி வருவதனால் இவருக்கு பிக் பாஸ் வீடு செட் ஆகாது. மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என அழுது கொண்டிருந்தார் எனவே இவர் வெளியேறுவதுதான் சரி. எனவே கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வினுஷா வெளியேறுவது தான் உறுதி. அந்த வகையில் தற்பொழுது ஓட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது.