துணி காயப் போட்டதால் பூர்ணிமாவை கேள்வி கேட்கும் தினேஷ்.. மண்டையில ஏதாச்சும் இருக்கா.? வைல்ட் கார்டு என்ட்ரியினால் சூடுபிடிக்க தொடங்கிய பிக் பாஸ்

Bigg Boss season 7 today promo 2: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது விஜே அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ், கானா பாலா, பேச்சாளர் அன்னபாரதி, விஜே பிராவோ ஆகிய ஐந்து பேரும் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர். எனவே இந்த ஐந்து பேரையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

எனவே இவர்களை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்கள் அப்படி இந்த வார கேப்டனான பூர்ணிமா தினேஷ், கானா பாலா, அன்னபாரதி, அர்ச்சனா, பிராவோ ஆகியோர்களுடன் சேர்த்து விசித்ராவையும் தேர்ந்தெடுத்து ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் வேண்டுமென்றே பிளான் போட்டு தான் இதனை செய்வதாகவும் பூர்ணிமா அனைவரிடமும் கூறுகிறார்.

அப்பனுக்கு புள்ள தப்பாமா பிறந்து இருக்கியே… பாக்கியாவிடம் வசமாக மாட்டிய செழியன்.. பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி..

எனவே வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கும், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இவ்வாறு இது ஒரு புறம் இருக்க தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கேப்டன் பூர்ணிமா ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது தினேஷ் வேற எங்கேயாச்சும் காய போடுங்கள் இங்க வந்து ஏன் துணிய காய போடுறீங்க என்று கேட்கிறார்.

அதற்கு பூர்ணிமா மண்டைல ஏதாச்சும் இருக்கா என்று கேட்கிறார். இந்த இடத்துல நீங்க துணியை காய போடக்கூடாது என்று நீங்கள் சொல்லக்கூடாது இப்படி ஆட்டிட்யூவோட பேசக்கூடாது. நீங்க பிரச்சனை பண்ணனும்னு நெனச்சீங்கன்னா நானும் பிரச்சனை பண்ணுவேன் என்று மிகவும் திமிராக ஸ்மார்ட் பாஸ் வீட்டார்களிடம் பூர்ணிமா நடந்து கொள்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கிய பார்ட் 2 திரைப்படங்கள்.! ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யாஷ்

எனவே இதனால் இதற்கு மேல் பிக் பாஸ் ஆட்டம் மாறுமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஆரம்பமே சண்டை சச்சரவுகளுடன் அமர்க்களம் ஆக இருக்கிறது.